பாடசாலை மாணவியின் விபரீத முடிவு! நடந்தது என்ன?

0
338

ஹட்டன் – டிக்கோயா பிரதேசத்தில் 11 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ள நிலையில் , அவரை மீட்டுள்ள பிரதேசவாசிகள் டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதால் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நோர்வுட் காவற்துறையினர் தெரிவித்தனர்.

ஹட்டன் , டிக்கோயா வனராஜா தோட்டத்தை சேர்ந்த இந்த மாணவி அவரின் வீட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அறையொன்றில் இன்று காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்த முயற்சித்துள்ளார்.

இந்த சிறுமி நோர்வுட் பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னணி பாடசாலையொன்றில் தரம் 6இல் கல்வி கற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நோர்வுட் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: