பாடசாலை சீருடையுடன் மாணவி செய்த காரியம்!

0
380

அநுராதபுர மாவட்டத்தில் தம்புத்தேகம பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையில் உயர்தரத்தில் படிக்கும் 18 வயதுடைய மாணவியை அவருடைய பெற்றோர் மனமுவந்து பொலிஸார் ஊடாக காதலனிடம் ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி குறித்த மாணவி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

எனினும் பாடசாலை செல்லாமல் சீருடையுடன் நொச்சியாகமத்திலுள்ள தனியார் பஸ் நிலையத்தில் தனது காதலனுடன் இருக்கும் போது, குறித்த பாடசாலையின் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையில் புத்த மதத்தினைப் போதிக்கும் பௌத்த பிக்குவும் பிடித்து தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் மற்றும் குறித்த இளைஞனின் பெற்றோரை விசாரணைக்கு வருமாறு பொரிஸார் அழைத்துள்ளனர்.

விசாரணையின் பின்னர் குறித்த மாணவியை பொலிஸார் தனது பெற்றோரிடம் ஒப்படைத்த போது, அவர்கள் அம்மாணவியை ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனென்றால் தனது மகளுக்கு காதல் விவகாரத்தில் பல முறை அறிவுரை செய்ததாகவும் அதற்கு அவள் கீழ்ப்படியவில்லை எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பெற்றோர் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அம்மாணவி 18 வயதுடையவர் என்பதால், அவரது காதலனிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: