பாசமான பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா: அதிர்ச்சி சம்பவம்!

0
451

மேகாலய மாநிலத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாத்தாவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வடகரோ மலையை சுற்றியுள்ள பகுதியில் வசித்து வந்த டேனி என்பவரின் மகனுக்கு திருமணமாகி 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஆரம்பத்தில் தனது தந்தையுடன் வசித்து வந்த மகன், பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து சென்றுள்ளார்.

7 வயது சிறுமி, தனது தாத்தாவின் வீட்டுக்கு அருகில் தான் டியூஷன் படித்து வந்துள்ளார். டியூஷனுக்கு வரும் சிறுமி தனது புத்தங்களை எடுத்துச் செல்வதற்கு சிரமமாக இருக்கும் நேரத்தில், தனது தாத்தா வீட்டில் வைத்துவிட்டு சென்றுவிடுவார்.

மேலும், தனது தாத்தாவின் மீது அன்பு வைத்திருந்ததால், அவரையும் அவ்வப்போது வந்து பார்த்து செல்வார்.

இந்த நிலையில் டியூஷன் செல்வதற்காக வீட்டிற்குள் வந்து சிறுமி புத்தகங்களை எடுத்துக்கொண்டு திரும்பிய போது,கதவை அடைத்துள்ளார். டியூஷன் போக வேண்டும், தாத்தா கதவைத் திறங்கள் என்று கூறியுள்ளார் சிறுமி. அதைக்கேட்டும் இரக்கமில்லாத அந்த தாத்தா, தனது பேத்தி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து வீடு சென்ற சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூற, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதையும் உணர்ந்துகொண்டனர். இதையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், கொடூரத் தாத்தா கைது செய்யப்பட்டார்.

அவர் மீது குழந்தைகள் வன்கொடுமை சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: