பாகுபலி ராணாவுக்கு கல்யாணம்! மணப்பெண் யார் தெரியுமா?

0
114

பாகுபலி ராணாவுக்கு கல்யாணம்! மணப்பெண் யார் தெரியுமா?

நடிகர் ராணா தக்குபாடி ‘பாகுபலி’ படத்தில் நடித்து பிரபலமானவர். இவர் தெலுங்கில் ‘லீடர்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன். ராணாவின் தாத்தா ராமாநாயுடுவும் தெலுங்குத் திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர்.

இவர் ஆரம்பம், இஞ்சி இடு+ப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது ராணா தான் காதலிக்கும் பெண் திருமணத்துக்குச் சரி என்று சொல்லிவிட்டார் என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவருக்கு மிஹீகா பஜான் என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாம். ஹைதராபாத்தை சேர்ந்த இவர் “டியூ டிராப் டிசைன்” ஸ்டூடியோவின் நிறுவனராக இருக்கிறார்.அதாவது ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார். பகுதி நேர மாடலாகவும் சில விளம்பரங்களில், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார் மிஹீகா.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: