பள்ளி மாணவனை கொலை செய்து மணலில் புதைத்த நண்பர்கள்: பதறவைக்கும் சம்பவம்!

0
496

இந்தியாவில் பள்ளி மாணவனை பணத்துக்காக கடத்தி கொலை செய்த நண்பர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கசியாபாத்தை சேர்ந்தவர் ஆயுஷ் சர்மா (16). ஒன்பதாம் வகுப்பு மாணவரான இவருக்கு 17 வயதான இன்னொரு மாணவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

அந்த மாணவர் மூலம் விராட் சர்மா (19) மற்றும் விஷால் (19) ஆகிய இரண்டு இளைஞர்கள் ஆயுஷுக்கு நண்பர்களாகியுள்ளனர்.

இந்நிலையில் விராட்டுக்கு 2.3 லட்சம் கடன் இருந்துள்ளது. ஆயுஷின் தந்தை கோடீஸ்வரர் என்பதை அறிந்த அவர் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து ஆயுஷை கடத்தி அவர் பெற்றோரிடம் பணம் பறிக்க திட்டம் போட்டார்.

அதன்படி கடந்த 16-ஆம் திகதி ஆயுஷை பைக்கில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு மூவரும் அழைத்து சென்று ஜூசில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளனர்.

இதையடுத்து ஆயுஷ் மயக்கமடைய தொடங்கிய நிலையில் அவரை வீட்டில் பணம் கேட்க சொல்லி மூவரும் மிரட்டியுள்ளனர்.

இதற்கு ஆயுஷ் மறுத்த நிலையில், பைக்கிலிருந்து திடீரென கீழே விழுந்த அவருக்கு தலையில் அடிப்பட்டுள்ளது, இதனால் பயந்து போன மூவரும் இனி இவனை உயிரோடு விட்டால் நமக்கு ஆபத்து என கருதி ஆயுஷை கொலை செய்து அங்குள்ள மணலில் புதைத்துள்ளனர்.

வீட்டை விட்டு வெளியில் சென்ற ஆயுஷ் வீடு திரும்பாததால் பயந்து போன அவர் பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் ஆயுஷை கொன்ற மூவரில் ஒருவரான 17 வயது மாணவருடன் செல்போனில் கடைசியாக பேசியது தெரியவந்தது.

இதையடுத்து மாணவரை பிடித்து விசாரித்ததில் அனைத்து உண்மைகளையும் அவன் பொலிசாரிடம் கூறியுள்ளான்.

பின்னர் அவரையும் விஷாலையும் பொலிசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விராட்டை தேடி வருகிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: