பல்லியை ஏன் கொல்லக்கூடாது? பல்லி விழுந்தால் என்ன பலன்!

0

எந்த ஒரு உயிரினம் இவ்வுலகில் வாழ வேண்டும் என்றாலும், மற்றொரு உயிரினத்தின் துணை அதற்கு கட்டாயம் வேண்டும், இதில் பல்லிகளும் ஒன்றாகும்.

மேலும் புராணங்களில் விலங்குகளை கொல்வது தீமை விளைவிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழலின் சமநிலை சீர்கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி சில வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

பல்லிக்கு ஒலி எழுப்பும் சக்தி உள்ளது. ஊர்வன வகைகளில் இதுபோல் ஒலி எழுப்பும் சக்தி மற்ற உயிரினங்களுக்கு கிடையாது. இயற்கையின் சூட்மத்தை உணரக் கூடிய தன்மையும் பல்லிக்கு உண்டு.

பறவைகளில் கிளி மிகவும் நுணுக்கமானது. ஆன்மிகத்தில் கிளி, கருடன், மயில் ஆகியவற்றிற்கு சிறப்பம்சம் உண்டு.

அவை தெய்வங்களின் வாகனமாக கருதப்படுவதால் அவற்றையும் வழிபடுகிறோம். அந்த வகையில் பல்லிக்கும் சில சிற்பங்கள் உண்டு.

கடவுள் மனிதர்களோடு உரையாட பல வழிகளை கொண்டுள்ளார் என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதில் பல்லியும் ஒன்றென கூறப்படுகிறது. நமது இதிகாசங்களில் பல்லி கடவுளின் தூதர் அல்லது செய்தியாளன் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே பல்லியை கொல்லக் கூடாது என வரையறுக்கப்பட்டுள்ளது.

புராணத்தில் இதற்கு ஏற்கனவே ஒரு படிப்பு இருந்தது உங்களுக்கு தெரியுமா?

அது தான் பல்லி அல்லது கௌளி சாஸ்திரம். இதில் பல்லி கத்துவதிலிருந்து, அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

மேலும், காஞ்சிபுரத்தில் இருக்கும் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பகிரகத்தில் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

இந்த பல்லிகள் இரண்டும் காந்தர்வர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இறைவனிடம் வரம்பெற்று இக்கோயிலை கட்ட உதவினார்கள் என்ற கூற்றுகளும் நிலவி வருகின்றன.

இது போல ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலில் பல்லி வணங்கப்படுகிறது. கடவுளை தரிசித்த பிறகு சுவற்றில் இருக்கும் பல்லி உருவத்தை வணங்குவதால் நன்மைகள் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நிகழப்போகும் இடர்பாடுகளில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி பல்லிக்கு உண்டு என்பது நம்பிக்கை. பல்லி கிழக்கு நோக்கி இருந்தபடி சப்தம் எழுப்பினால் ஒருவித பலனும், மேற்கு நோக்கி இருக்கும் போது சப்தம் எழுப்பினால் மற்றொரு பலனும் கூறப்படுகிறது. ஜீவராசிகளில் பல்லிக்கு கூடுதல் சக்தி உண்டு என்பதில் மாற்றமில்லை.

பல்லி விழும் பலன்
தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்

தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்

நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி

நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்

வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி

வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்

முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை

முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்

கண் இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்

கண் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்

தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி

தோள் வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி

பிருஷ்டம் இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்

பிருஷ்டம் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்

கபாலம் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு

கபாலம் வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு

கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்

கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு

மூக்கு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை

மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி

மணிக்கட்டு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி

மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை

தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்

நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்

நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு

காது இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்

காது வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்

மார்பு இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்

மார்பு வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்

கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி

கழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாலியல் தொல்லை கொடுத்த பூசாரி! கோவிலுக்கு வந்த பெண்ணிற்கு நேர்ந்த கதி!
Next articleசுந்தரத்தின் மனைவியின் திடுக்கிடும் வாக்குமூலம்! அபிராமியை எனக்கு 2 மாதங்களாக தெரியும்!