பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கான அமைச்சரவை யோசனை இன்று முன்வைக்கப்படுகின்றது!

0
204

யாழ். பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று முன்வைக்கப்படவுள்ளது.

போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு, கொள்கை திட்டமிட்டல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இணைந்து இந்த யோசனையை முன்வைக்க உள்ளன.

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதற்காக இந்திய அதிகாரிகள் குழு ஒன்று பலாலிக்கு விஜயம் செய்து, ஆய்வுகளை நடத்தி இருந்தது.

ஆனால் பலாலி விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட மாட்டாது என போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே இன்றையதினம் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கான அமைச்சரவை யோசனை முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: