பரம எதிரி பாகிஸ்தானுடம் மோதும் இந்தியா! பிரதமர் இம்ரான் சொன்ன வார்த்தை இது தான்!

0

உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி மோதவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் பிரதமர் தங்கள் நாட்டு வீரருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் பலரின் எதிர்பார்ப்பாக இருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி இன்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில் அவ்வப்போது மழை குறுக்கிட்டு வருவதால் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பிரதமர் இம்ரான்கான், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கும்போது, வெற்றி என்பது 70 சதவீதம் திறமையாலும், 30 சதவீதம் மன வலிமையாலும் கிடைக்கிறது என நினைத்தேன். அதுவே நான் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து வெளியேறும்போது வெற்றியில் திறமை 50 சதவீதமும், மன உறுதி 50 சதவீதமும் இருப்பதாக எண்ணினேன்.

ஆனால் தற்போது வெற்றியில் 60 சதவீதம் மன உறுதி மற்றும் 40 சதவீதம் திறமையின் பங்கு என கூறும் கவாஸ்கரின் கூற்றை ஏற்கிறேன். இன்றைய போட்டியில் கிடைக்கும் வெற்றியில் மன வலிமை என்பது 60 சதவீதற்கும் அதிகமான பங்கினை வகிக்கும்.

இரண்டு அணிகளுக்குமே மன அளவிலான ஒரு பெரிய அழுத்தம் இருக்கும். ஆனால் மன வலிமை அதிகமாக இருக்கும் அணியே வெற்றி பெறும். நாங்கள் ஒரு தைரியமான கேப்டனையே கொண்டிருக்கிறோம். அவர் இன்று துணிச்சலுடன் இருக்க வேண்டும்.

மனதில் இருக்கும் எல்லா பயத்தையும் வெளியேற்றிவிட்டு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தோற்றுவிடுவோமோ என்கிற பயமே எதிர்மறை எண்ணத்தை உருவாக்கிவிடும். இதுவே பாகிஸ்தான் அணிக்கு நான் அளிக்கும் அறிவுரை.

சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களோடு கேப்டன் சர்பராஸ் செல்ல வேண்டும். டாஸில் வெற்றிப் பெற்றால் சர்பராஸ் பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை தேடும் பொலிஸார்!
Next articleகாலையில் கண் விழித்ததும் யாரை பார்த்தால் அதிர்ஷ்டம் வரும் தெரியுமா!