பனைமரத்தால் பணக்காரரான நபர்: லட்சக்கணக்கில் வருமானம்!

0
343

கேரளாவை சேர்ந்த பனைமரம் ஏறும் தொழிலாளியான சலீமான் மாதம் தோறும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

கோட்டயம் அருகே உள்ள மடப்பாடு பகுதியை சேர்ந்த சலீமான்,பனைமரம் ஏறும் தொழிலை கடந்த 32 ஆண்டுகளாக செய்து வருகிறார்.

மாதாமாதம் சர்வசாதாரணமாக 1,25,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். சலீமானின் நாள் சம்பளம் 4 ஆயிரம் ரூபாய். இதுதவிர, பனைமரம் ஏறும் சங்கம் வழங்கும் போனஸ் தனி. கடந்த ஆண்டு சலீமான் இரண்டரை லட்சம் ரூபாய் போனஸாகப் பெற்றார்.

இவரது தந்தையும் பனைமரம் ஏறும் தொழிலாளியின். இவரது சிறு வயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், குடும்ப பாரத்தை இவர் ஏற்றுக்கொண்டார்.

காலை 7 மணிக்கு மரம் ஏறத்தொடங்கினால் இரவு தான் தனது வேலையை நிறுத்துவார். நாள் ஒன்றுக்கு 210 லிட்டர் கள் இறக்குவார்.

கடந்த நிதி ஆண்டில் மட்டும் 40 ஆயிரம் லிட்டர் கள் இறக்கி சலீமான் சாதனை படைக்க, கேரள அரசு அவருக்கு விருது வழங்கி கௌரவித்தது.

தனது கடின உழைப்பால், மூத்தமகளை எம்காம் மற்றும் இளைய மகளை பிகாம் படிக்க வைத்துள்ளார்.

பனைமரத்தால் வாழ்க்கையில் உயர்ந்த நான், ஒரு நாள் கூட வேலைக்கு போகாமல் இருக்கமாட்டேன். இப்போதைய தலைமுறையினர் பனைமரம் ஏறுவதற்கு வருவதில்லை.

இதனால், நான் மரம் ஏற செல்லவில்லையென்றால் என்னை நம்பியிருக்கும் கள் கடைக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள். எனடு குடும்பத்துக்கு சோறுபோட்ட இந்த பனைமரம் ஏறும் பணியினை தொடர்வேன் என கூறுகிறார் சலீமான்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: