பதறவைக்கும் சம்பவம்! 86 இடங்களில் தாக்கப்பட்டு சிறுமி படுகொலை.!

0
310

இந்தியா – குஜராத் மாநிலத்தில் 11 வயது சிறுமியொருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த தினத்தில் 8 வயது ஆஷிபா காஷ்மீரில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் கொந்தளிப்பு அடங்கும் முன்பு தற்போது இந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காஷ்மீர் கத்துவா பிரதேசத்தில் குதிரை மேய்க்க சென்ற ஆஷிபா 7 நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்கு முன்னர் , குஜராத்தில் உள்ள சூரத் என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள கிரிக்கட் மைதானத்திற்கு அருகில் இருந்து சுமார் 86 இடங்களில் காயங்களுடன் குறித்த 11 வயது சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..

எவ்வாறாயினும் ,குறித்த சிறுமி யார் என்பது குறித்து அடையாளம் இதுவரை காணப்படவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

காவற்துறையினர் உடலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , இந்த சிறுமியும் கொடூரமாக பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரேத பரிசோதனை அறிக்கையில் , சிறுமியின் உடலில் 86 இடங்கள் தாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் , சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தேடி காவற்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: