பக்கவாதம் என்னும் பாரிசவாதத்தை குணப்படுத்தும் மூலிகை தைலம் தயாரிப்பது எப்படி! பயனுள்ள குறிப்பு!

0
1478

பக்கவாதம் அல்லது பாரிசவாதம்(stroke) என்பது மூளைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில் தடை ஏற்படுவதனால் மூளைக்குக் குருதி செல்வது தடைப்பட்டு மூளையின் செயற்பாடுகள் மிகவிரைவாக இழக்கப்படுவதைக் குறிக்கும்[1] குருதி உறைதல், குழலியக்குருதியுறைமை போன்றவற்றால் அல்லது குருதிப்பெருக்கினால் குருதி வழங்கல் குறைவடையும்போது இது நிகழக்கூடும்.

மூளைக்கு செல்லும் குருதியின் அளவு குறையும்போது மூளையின் உயிரணுக்களுக்குத்தேவையான ஊட்டச்சத்துக்களும், பிராண வாயுவும் கிடைக்காமல் போவதினால் பாதிக்கப்படும் மூளையின் பகுதி செயற்பட முடியாமல் போய், உடலின் ஒரு பக்கத்திலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உடல் உறுப்புக்கள் இயங்க முடியாமல் போகிறது. அத்துடன், புரிந்துகொள்ள முடியாமை, ஒழுங்காகப் பேசமுடியாமை, பார்வைப் புலத்தின் ஒரு பகுதியைப் பார்க்க முடியாதிருத்தல் போன்றவையும் ஏற்படலாம்

பக்கவாதம் நிரந்தரமான நரம்புச்சிதைவை ஏற்படுத்துவதுடன் இறப்பும் நிகழலாம். ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் வளர்ந்தவர்களில் ஏற்படும் ஊனத்துக்கான முன்னணிக் காரணம் இதுவாகும். ஐக்கிய இராச்சியத்தில்இறப்புக்கான காரணிகளில் இது மாரடைப்புக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவிலும் இறப்புக்கான காரணிகளுள் இது இரண்டாவதாக இருப்பதுடன், விரைவில் இது முதல் இடத்துக்கு வரக்கூடும் எனக் கருதப்படுகிறது.

“பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள்”

நோய் அறிகுறிகளும் உணர்குறிகளும்

பக்கவாதத்திற்கான அறிகுறிகள் பொதுவில் திடீரென சில வினாடிகளிலிருந்து சில நிமிடங்களில் தோன்றுபவையாக இருக்கும். அவை பொதுவாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு போவதில்லை. ஏற்படும் பாதிப்பானது, மூளை எவ்வளவு தீவிரமாக பாதிப்படைந்திருக்கிறது என்பதைப் பொறுத்து அமையும்.

எமது பேசுதல், நடத்தல், எழுதுதல் போன்ற ஒவ்வொரு நடவடிக்கையும் மூளையிலுள்ள குறிப்பிட்ட தொழிற்பாட்டு மையங்களால் கட்டுப் படுத்தப்படுகின்றது. ஆகவே மூளையின் எந்தப் பகுதிக்கு குருதி வழங்கல் தடைப்படுகிறது என்பதைப் பொறுத்து அறிகுறிகளும் மாறுகின்றன. பொதுவாக பக்கவாதத்தினால், உடலின் ஒரு பக்கமே இவ்வாறு பாதிப்படைகிறது. மூளையின் எப்பகுதி தாக்கத்துக்கு உட்படுகிறதோ, அதற்கு எதிரான உடலின் பக்கமே பாதிப்புக்குள்ளாகிறது. ஆனால் இங்கு கூறப்படும் அறிகுறிகளும், உணர்குறிகளும் வேறு காரணங்களாலும் ஏற்பட சாத்தியங்கள் இருப்பதால், இவை கட்டாயமாக பக்கவாதத்தினால் ஏற்பட்டவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

அடையாளம் காணும் ஆரம்பநிலை

முகத் தசைகளில் ஏற்படும் தளர்ச்சி, கையை தூக்க முடியாமல் போதல், அசாதாரணமாக பேசுதல் போன்றவை பக்கவாத நோயை கண்டு பிடிப்பதில் முதன்மையான அறிகுறிகளாக அறியப்படுகின்றன. (இம்மூன்று அறிகுறிகளில் ஏதாவதொன்று அறியப்படுகையில் பக்கவாதத்திற்கான நிகழ்தகவு வீதம் 5.5 எனவும், இம்மூன்றில் எந்தவொரு அறிகுறியும் இல்லாதிருக்கையில் பக்கவாதத்திற்கான நிகழ்தகவு வீதம் 0.39 எனவும் அறியப்பட்டுள்ளது).

இவை நோயை கண்டறிவதற்கான மிகச்சிறந்த முறையாக இல்லாவிடினும், விரைவாக நோயை கண்டறிய உதவும்.

* தீர்வு தரும் ஐந்தெண்ணைய் *
ஒரு படி வேப்பெண்ணெய்
” கொட்டை முத்தெண்ணெய்
” புங்கெண்ணெய்
” புன்னையெண்ணெய்
” நல்லெண்ணெய்

யாவும் சேர்த்து மூன்று நாள் அடிக்கடி கலக்கி விட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.
அதன் பிறகு வசம்பு பூண்டு பெருங்காயம் சுக்கு மிளகு திப்பிலி கிராம்பு ஓமம் சதகுப்பை கடுகுரோகிணி சித்திரமூலம் யாவும் வகைக்கு 100 கிராம் பொடிசெய்து தைலமாக காய்ச்சி தினம் காலை மாலை உட்கொண்டு உடலில் தெய்த்து வர அண்டவாதம் நரிவாதம் படுவாதம் கடினவாதம் முகவாதம் சன்னிவாதம் போன்ற கொடிய வாதநோய்கள் தீரும்.

குறிப்பு: கைபாகம் செய்பாகம் முக்கியம், மேலும் ஆயிரக்கணக்கான மூலிகை மருந்துகள் உண்டு, எனது பதிவுகள் மக்கள் நலம் பெறவே. நான் தயாரிக்கும் என் மருந்துகளால் பலனடைந்தோர் பலர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: