14 வயது பெண்ணின் வாயில் சோப்பு ஆயில் ஊற்றி துப்பட்டாவால் கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ள பயங்கரம் சென்னையில் அறங்கேறியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்தான் இந்த சிறுமி. அந்த பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சாயங்காலம் 5 மணி அளவில் வீட்டில் சிறுமி தனியாக இருந்தாள். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் விஜி தாமஸ் (26) என்பவர் திடீரென வீட்டுக்குள் நுழைந்தார்.
அந்த பகுதியில் 6 வருஷங்களாக ஆட்டோ ஓட்டி வரும் இவர் வீட்டுக்குள் நுழைந்ததும், முதல் வேலையாக சிறுமியின் கைகளை அவளது துப்பாட்டாவால் கட்டிவிட்டார். பிறகு சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது சிறுமி பயத்தில் அலறி கூச்சல் போட்டாள். இதனால் இன்னும் ஆத்திரம் அடைந்த விஜி தாமஸ், சோப்பு ஆயிலை எடுத்து சிறுமியின் வாயிலேயே ஊற்றிவிட்டார்.
இதையடுத்து பதட்டமடைந்த விஜிதாமஸ் உடனடியாக வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார். சிறுமியின் அழுகுரலை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, துப்பாட்டாவால் கைகள் கட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவளை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், சிறுமியின் தாயார் புளியந்தோப்பு மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு தெய்த பொலிசார் விஜி தாமஸை தேடி வருகின்றனர்.