நேற்று யாழில் இடம்பெற்ற பயங்கரம்!! முழுமை விபரம் இங்கே படியுங்கள்

0
888

நேற்று யாழில் இடம்பெற்ற பயங்கரம்!! முழுமை விபரம் இங்கே படியுங்கள்

யாழ்ப்பாணம் மானிப்பாய் ஆணைக்கோட்டை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 72 வயது மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டுள்ள மூதாட்டியின் தலையில் அடி காயங்கள் காணப்படுவதாக மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனைக்கோட்டை பொன்னையா வீதியிலுள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த ஜெகநாதன் சத்தியபாமா என்ற 72 வயதுடைய வயோதிப் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி வீதியிலுள்ள வீடொன்றில் குறித்த பெண்ணின் கணவர் ஏற்கனவே இறந்துள்ள நிலையில் மகனொருவர் மட்டுமே அவருக்கு தற்போது இருக்கின்றார்.

ஆயினும் அவரும் தற்போது வன்னியில் வசித்து வருகின்றார்.

இதனால் அந்த வீட்டில் அவர் தனிமையிலையே இருந்த வருகின்றார்.

இந் நிலையில் அவரது உறவினர்கள் அவருக்கு உணவுகளை வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு நேற்று மதியமும் அவருக்கு உணவுகளை உறவினர்கள் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு நேர உணவை வழங்குவதற்காக வீட்டிற்குச் சென்ற போது குறித்த வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வயோதிப் பெண் உயிரிழந்துள்ளதை உறவினர்கள் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் காவற்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த காவற்துறையினரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த வயோதிப் பெண்ணின் காதில் மற்றும் கையில் இருந்த நகைகள் என்பன காணாமல் போயிருப்பதாகவும் மேலும் ஏதாவது காணாமல் போயுள்ளதா என்பது குறித்தும் தெரியவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

மேலும் உயிரிழந்த பெண்ணின் தலையில் காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வயோதிபப் பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகங்கள் காணப்படுவதால் அங்கு திருட்டுக்கள் இடம்பெற்றனவா என்றும் திருட்டுக்காக கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்த கோணத்தில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: