நேற்று இரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடியாக சுற்றிவளைப்பு!

0
174

திருகோணமலையில் பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அரச மதுபானத்தை அனுமதிப் பத்திரமின்றி விற்பனை செய்து வந்த நபரொருவர் 3ஆம் கட்டை அலக்ஸ் தோட்ட கடற்கரை பின் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 49 வயதுடைய குடும்பஸ்தரே 555 மில்லிலீற்றர் மதுபானத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த நபருடன் கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்கள் உப்புவெளி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: