நெஞ்சை உருக்கும் காட்சி: பிறந்த பிஞ்சு குழந்தைக்கு முத்தமிட்ட கொரில்லா..!

0
326

அமெரிக்காவில் தனக்கு பிறந்த குட்டி குழந்தையை தாய் கொரில்லா கட்டியணைத்து முத்தமிடும் காட்சி அனைவரது நெஞ்சையும் உருக வைத்துள்ளது.

வாஷிங்டனில் உள்ள தேசிய விலங்குகள் பூங்காவில் Calaya என்ற கொரில்லா ஆண் குழந்தையை பெற்றெடுத்தது.

15 வயதுடைய Calaya என்ற தாய்க்கும், 26 வயதுடைய Baraka என்ற தந்தைக்கும் குட்டி கொரில்லா பிறந்துள்ளது.

தனது குழந்தையை கையில் எடுத்த தாய் கொரில்லா, தனது நெஞ்சோடு இறுக அணைத்து முத்தமிட்டுள்ளது. தாய் கொரில்லாவின் இந்த அரவணைப்பு பார்ப்பவர்களின் நெஞ்சை உருக வைத்துள்ளது.

இந்த காட்சியை பூங்காவானது தனது இணைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: