நீதிமன்றம் கொடுத்த உத்தரவு! கொழும்பில் சர்ச்சையை ஏற்படுத்திய பெண் வைத்தியர்!

0
262

பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விபத்தையடுத்து கைது செய்யப்பட்ட பெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, குறித்த சந்தேகநபரான பெண் வைத்தியரை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன மாவத்தையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விசேட பெண் வைத்தியர் ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதற்கமைய விபத்தை ஏற்படுத்திய பெண் வைத்தியர் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: