நீண்ட காலமாக தொடர்ந்து வந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்!

0
361

பெலியத்த, நாகுலுகம பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபரான கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்று, தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் நீண்ட காலமாக இருந்த பிரச்சினை தீவிரமடைந்ததன் காரணமாகவே குறித்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: