நீங்க குண்டா இருப்பதற்கு இந்த 6 வகையில் எந்த வகை கொழுப்பு காரணம் என்று தெரியுமா உங்களுக்கு!

0
1157

கொழுப்பில் இரண்டு வகைகள் உண்டு. அதுதான் Low-density lipoproteins (LDL) மற்றும் High-density lipoproteins (HDL) அதில் LDL கொழுப்பு தீயது, HDL கொழுப்பு நல்லது.

நம் உடலில் உள்ள கொழுப்பை ஆறு பிரிவுகளாக பிரித்துள்ளனர். அவைகள் நம் உடலில் எங்கெங்கே சேமிப்பாகிறது, என்னென்ன பிரச்சனைகளை உண்டாக்குறது என்பதை பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

வெள்ளை கொழுப்பு

வெள்ளை நிறத்தில் உள்ள ஒயிட் ஃபேட் எனப்படும் வெள்ளை கொழுப்பு, Adipocytes என்று கூறப்படுகிறது. இது ரத்தத்தில் குறைந்த அடர்த்தி மற்றும் மிடோகோன்றியா (Mitochondria) போன்ற காரணங்களால் உண்டாகிறது.

இந்த வெள்ளை கொழுப்பு செல்கள், பசியை தூண்டும் லெப்டின் செல்களை தூண்டி, அடிக்கடி பசி உணர்வை ஏற்படுத்தி உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

பழுப்பு கொழுப்பு

பழுப்பு நிறத்தில் உள்ள பிரவுன் ஃபேட் எனப்படும் இந்த கொழுப்பு இது Mitochondria-யாவால் சூழப்பட்டது. இது நம் உடலில் எனர்ஜி சேமிப்பாகும் இயக்கத்தை தடுக்கும். இந்த கொழுப்பை கரைக்க தினமும் உடற்பயிற்சிகளை செய்தாலே போதும்.

பழுப்பு வெள்ளை கொழுப்பு

Beige Fat எனப்படும் இந்த பழுப்பு வெள்ளை கொழுப்பு, வெள்ளை கொழுப்பில் இருந்து பழுப்பு கொழுப்பாக மாறும் இடைப்பட்ட நிலையில் அமையும் கொழுப்பு வகையைச் சேர்ந்தது.

எசன்ஷியல் ஃபேட்

நாம் உயிர் வாழ மிகவும் அவசியமான கொழுப்பு தான் இந்த அத்தியாவசிய கொழுப்பு (எசன்ஷியல் ஃபேட்) ஆகும். இது உடலின் தட்பவெட்ப நிலையை ஒருநிலையில் வைத்து, விட்டமின் சத்துக்களை உள்வாங்கி, செல்களின் அமைப்பை செயல்படுத்த உதவுகிறது.

உள்ளுறுப்பு கொழுப்பு

உள்ளுறுப்பு கொழுப்பு நம் வயிற்றின் அடிப்பகுதி, கணையம், கல்லீரல் போன்ற பாகங்களை சுற்றி இருக்கும். நம் உடலில் இக்கொழுப்பு அதிகரித்தால் டைப் 2 நீரிழிவு, மார்பக புற்றுநோய் போன்ற நோய்கள் உண்டாகும். ஆனால் இந்த வகை கொழுப்பை தினசரி உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் எளிதில் குறைக்கலாம்.

தோலுக்கு அடியே தேங்கும் கொழுப்பு

நமது உடலில் இருக்கும் 90% கொழுப்பு இந்த வகை தான் உள்ளது. இது உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. எனவே இந்த கொழுப்பை கரைக்க கார்ப்ஸ் உணவுகளை தவிர்த்து, அதிக உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: