நீங்கள் இந்த ராசிக்காரர்களா? உங்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்துவிடுமாம்!

0

நீங்கள் இந்த ராசிக்காரர்களா? உங்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்துவிடுமாம்!

சிலர் திருமணம் வேண்டாம், துணை வேண்டாம், தன் வாழ்க்கையை தனியாகவே கழிக்க நினைப்பவர்கள் உண்டு.

சிலர் இளம் வயதிலேயே திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்க நினைப்பார்கள்.

இந்த பதிவில் வாழ்க்கையில் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ளக்கூடிய 4 ராசியினரைக் குறித்துப் பார்ப்போம்.

மிதுனம்
மிதுன ராசியினர் சமூகத்தில் பட்டாம்பூச்சி போன்று சுற்ற நினைப்பவர்கள். தன்னுடைய ராசி அடையாளமான இரட்டையர் அல்லது இணைந்த உருவத்தைப் போல தன்னுடன் ஏதேனும் ஒரு துணை இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

இவர்களைப் பொறுத்தவரையில் திருமணத்தால் ஒரு துணையும், ஆதரவான நபரும் கிடைப்பார்கள் என்பதால் இளமையிலேயே திருமணம் செய்து கொள்ள அதிக நாட்டம் கொண்ட நபர்களாக இருப்பார்கள்.

கடகம்
அழகு, அன்பைத் தரக்கூடிய மனோகாரகன் சந்திரன் ஆளக்கூடிய கடக ராசியினர் எப்போதும் குழுவாக வாழ நினைப்பார்கள். இவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னை நம்பியவரைத் தவிக்கவிட்டுச் செல்ல மாட்டார்கள்.

துலாம்
துலாம் ராசியினர் தனிமையை விரும்பாதவர்கள். அதனால் திருமணம் என்று வரும் போது தன் வாழ்க்கைத் துணையைப் போற்றக்கூடியவர்களாகவும், மிக ஆதரவாக இருப்பார்கள். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள விரும்பக்கூடியவர்கள். அதனால் இவர்கள் 20 வயதுக்கு முன்னரே தன் திருமணத்திற்குத் தயாராகி விடுவார்கள்.

கன்னி
கன்னி ராசியினர் எந்த ஒரு விஷயத்தையும் தாங்களாகவே கையாள நினைப்பார்கள். இவர்கள் சந்தோஷமோ, சோகமோ தனியாக சமாளிக்க நினைப்பார்கள்.

ஆனால் மறுபுறம் மனம் ஆறுதல் தேடிக் கொண்டேயும் இருக்கும். தனக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரு நபர் வாழ்க்கையில் வந்தால் விரைவாக ஏற்றுக் கொள்வார்கள்.

இதனால் இந்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅரசியல் தீர்வு கோரும் மக்களின் போராட்டம் 7ஆவது நாளாக தொடர்க்கிறது!
Next articleசீனா இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழையும் வாய்ப்பு!