நீங்கள் அன்றாடம் உபயோகிக்கும் செல்போனை எப்படியெல்லாம் புடிப்பீங்க சொல்லுங்க! உங்களை பற்றி நாங்க சொல்றோம்!

0

கிரக நிலை ஜோதிடம், கை ரேகை ஜோதிடம் மாதிரி இதுவும் ஸ்மார்ட் போன் ஜோதிடம் என்றே கூறலாம். ஆமாங்க 2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 3 பில்லியன் மக்கள் ஸ்மார்ட் போனை பயன்படுத்துவார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதை நீங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியாக ஒருபக்கம் பார்த்தாலும் மனநிலை சார்ந்ததாக பார்க்க வேண்டும் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் நாம் ஸ்மார்ட் போனை கையாளும் விதம், பயன்படுத்தும் முறைகள் போன்றவைகள் நம் குணத்தை வெளிப்படுத்துகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதை ஆராயும் விதமாக ஸ்மார்ட் போனைக் கொண்டு ஒரு சுவாரஸ்யமான சோதனையை மேற்கொண்டனர். சரி வாங்க அதைப் பற்றி கீழ்க்காணும் படங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஸ்மார்ட் போனை ஒரு கையால் பிடிப்பது

நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் எதாவது செய்தி படிக்கும் போதோ, டைப் செய்யும் போதோ, ஸ்கீரினை நகர்த்தும் போதோ ஒரு கையை மட்டும் பயன்படுத்துபவராக இருந்தால் நீங்கள் மிகவும் நம்பிக்கையான நபராக இருப்பீர்களாம். தனியாளாக இருந்து அனைத்தையும் சமாளித்து விரும்பிய முடிவுகளை எடுத்து அதில் வெற்றியும் அடைவீர்களாம். அது மட்டுமல்லாமல் ஒரு நபருடனான உறவை தீர்மானிக்க அந்த நபர் நம் வாழ்க்கையில் தேவையா இல்லையா என்பதை தீர்மானிக்கவும் போதுமான நேரத்தை செலவழிப்பீர்கள். அதனால் தான் என்னவோ மற்றவருக்கு நீங்கள் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட நபராக தெரிவீர்கள்.

ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கை பெருவிரலால் ஆப்ரேட் செய்தல்

இந்த மாதிரி ஸ்மார்ட் போனை கையாள்பவர்கள் புத்திசாலியாக இருப்பார்களாம். உங்கள் உள்ளுணர்வு சரியானதாகவும் மிகுந்த புத்திசாலித்தனத்தை கொண்டும் காணப்படுவீர்கள். எந்தவொரு காரியத்திலும் முதல் அடி எடுத்து வைப்பதற்கு முன் பல அடி முன்னால் சென்று யோசிப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் முன்னரே புரிந்து கொள்வீர்கள். இதனால் உங்களை ஏமாற்றுவது மிகவும் கடினம். இருப்பினும் நீங்கள் காதல் விஷயங்களில் கடினமாக நடந்து கொள்ளும் நபராக இருப்பீர்கள். உறவில் நீங்கள் சிந்திக்காமல் எடுக்கின்ற ஒரு சில முடிவுகள் உங்கள் உறவை பாதிக்க கூடும். காதல் என்று வரும் போது நிறைய சட்ட திட்டங்களை பேசும் நபராக மாறி விடுவீர்கள்.

இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு ஆப்ரேட் செய்வது

ஸ்மார்ட் போனை இரண்டு கைகளிலும் பிடித்து கொண்டு கையாள்பவரா நீங்கள் அப்போ உங்கள் லவ் ரொம்ப பாஸ்ட்டாக இருக்கும். நீங்கள் விரைவான திறமையான முடிவுகளை எடுக்கும் நபராக இருப்பீர்கள். வேகமாக மாறும் சூழலுக்கு ஏற்ப மாறி திறம்பட செயல்படுவீர்கள். ஆனால் காதல் என்று வரும் போது உங்கள் வேகம் போதாது. உண்மையைச் சொல்லப் போனால் நீங்கள் காதலில் எதிர் தான். உங்கள் பயமே அன்பானவர்கள் நெருக்கத்தை இழக்க வைக்கும்.

ஒரு கையில் பிடித்துக் கொண்டு இரண்டாவது கையின் ஆள்காட்டி விரலால் கையாள்வது

இந்த மாதிரி ஸ்டைலில் போனை கையாளும் நபர்கள் க்ரீயேட்டிவ் திறன் கொண்டவராக இருப்பார்களாம். நிறைய ஐடியாக்களை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி அதை திறம்பட முடித்தும் காட்டுவீர்கள். உங்களுடைய எண்ணங்களை ஒன்று திரட்டி உங்களுக்கென்ற உலகில் தனியாக வாழ்வீர்கள். ஓவியம் தீட்டுதல் அல்லது புத்தகம் எழுதுதல் போன்றவை உங்களுக்கு வெற்றி தரும். காதல் என்று வரும் போது உங்கள் படைப்பாற்றல் அப்படியே கூச்ச சுபாவமாக மாறி விடும். இதனாலேயே நீங்கள் காதல் உறவில் செல்ல திணறுவீர்கள். ஆனால் உங்களை யாரும் புரிந்து கொண்டால் அவருடனான உறவு நன்றாகவே இருக்கும். கண்டிப்பாக உங்கள் ஆளுமை திறனை கண்டு அவர்கள் ஆச்சரியப்படுவார்கள். என்னங்க நீங்க எந்த ஸ்டைல போன பிடிக்கிறீங்க? நீங்களும் எப்படிப்பட்ட நபர்னு தெரிஞ்சுகிட்டீங்களா.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுத்தாண்டு பலன் – 2019 ரிஷபம்!
Next articleஇது தான் ரஜினியின் கதாபாத்திரம்! பேட்ட ட்ரைலரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?