நிலை விழுந்ததில் படுகாயமடைந்த குழந்தைக்கு மூன்று நாட்களின் பின் நேர்ந்த விபரீதம்: ஊரே சோகத்தில்!

0
325

திருகோணமலையில் வீட்டில் வைத்திருந்த ஜன்னல் நிலை விழுந்து படுகாயமடைந்த குழந்தையொன்று மூன்று நாட்களின் பின் நேற்று இரவு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் கிண்ணியா – 06, ஜாவா வீதி எனும் முகவரியை சேர்ந்த றமீஸ் – சயான் எனும் மூன்று வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.

கடந்த 16ஆம் திகதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது குழந்தை மீது ஜன்னல் விழுந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த குழந்தை கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: