நிலம்புரண்டி மூலிகை ! இம்மூலிகை பெரும்பாலும் புதயலை கண்டுபிடிப்பதற்க்கு உபயோகபடுத்துகிறார்கள் !

0
996

நிலம்புரண்டி என்பது மனிதர்கள் வாடை பட்டதும் நிலத்தை குடைந்து கொண்டு உள்ளே சென்று விடும் .இம்மூலிகை பெரும்பாலும் புதயலை கண்டுபிடிப்பதற்க்கு உபயோகபடுத்துகிறார்கள்.

இந்த மூலிகை சாதாரணமாக பூமியில் மற்ற செடி கொடிகளுக்கு இடையில் முளைத்திருக்கும், இது மனிதர்களின் வாசனை பட்ட மாத்திரத்தில் மண்ணை கீறிக்கொண்டு உள்ளே போய்விடும், அதனால்தான் இதற்கு நிலம் புரண்டி என்ற பெயரை நமது முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள், இதை கண்டு பிடிக்க வேண்டும் என்றால் சாதாரணமாக நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் தேத்தான் கொட்டைகளை வாங்கி கையில் வைத்துக் கொண்டு நடந்தால் தேத்தான் கொட்டையினுடைய வீரியத்தால் நிலத்திற்குள் போகாமல் வெளியே நின்று விடும்,

மூலிகை இருக்கும் இடம் சென்றால் சல சல என சத்தம் வரும் அதை வைத்து அறியலம் .மேலும் தேத்தான் கொட்டைகள் கையில் இருந்து கீழே நழுவி விடும் .

சாப நிவர்த்தி :-

நிலம்புரண்டி மூலிகையை ஞாயிறு. செவ்வாய் மற்றும் வியாழன் கிழமையில் சூர்ய உதயத்திற்கு முன் இடத்தை சுத்தம் செய்து அச்செடிக்கு சாப நிவர்த்தி செய்து மந்திரத்தால் உயிர் கொடுத்து காப்பு கட்டி தூப தீபங்கள் காட்டி பறித்து வந்துகுழித்தைலம் இறக்க வேண்டும், அந்த தைலத்தில் பச்சை கற்பூரம் ஜவ்வாது.

கோரோசனை மூன்றும் சம எடையில் சேர்த்து குழைத்து அஞ்ஜனமாக்கி வைத்துக்கொள்ள வேண்டும், அந்த அஞ்ஜனத்தில் ஆஞ்சநேய மூல மந்திரம் மற்றும் அஞ்ஜனா தேவி மூல மந்திரம் முறையே 1008 முறை ஜபித்து உருஏற்ற வேண்டும்,தேவையான போது அந்த அஞ்ஜானத்தை சிறிது எடுத்து வெற்றிலையில் தடவி மேற்குறிப்பிடும் மூல மந்திரத்தை 108 முறை ஜபித்து வெற்றிலையில் பார்த்தால் தொலைக்காட்சி பெட்டியில் படம் தெரிவது போல் புதையல் இருக்கும் இடத்தை நமக்கு மிகதுல்லியமாக காட்டும்,

மேலும். இந்த மூலிகையின் வேரை கன்று போடாத பசுஞ்சானத்தோடு எரித்து சாம்பலாக்கி நீரில் கரைத்து மேற்குறிப்பிட்ட மூல மந்திரத்தை முறைப்படி ஜபித்து புதையல் இருப்பதாக நாம் கருதும் இடத்தில் இரவில் தெளித்து விடவேண்டும்,காலையில் சென்று பார்த்தால் அங்கு புதையல் இருக்கும் பட்சத்தில் பாளம் பாளமாக வெடித்து இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண்களின் உயிரணுக்களை உற்பத்தி செய்வதோடு பெண்கள் விரைவாக கருத்தரிக்க உதவும் மணத்தக்காளி கீரை!
Next articleஎதிரிகளை தலைதெறிக்க ஓடவைக்கும் மூலிகை !