நியூஸிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவன் உயிருக்கு ஆபத்து! பொலிஸ் நடவடிக்கை!

0

நியூஸிலாந்து மசூதிகள் இரண்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியவனுக்கு சிறையில் சக கைதிகளால் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவன் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

நியூஸிலாந்தில் இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி 50 பேர் உயிரிழக்கக் காரணமானவனான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரெண்டன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறையில் இருக்கும் கேங் மெம்பர்களால் அவனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள வழக்கறிஞர் ஒருவர், பிரெண்டன் நடத்திய படுகொலைகளால் சிறையிலிருக்கும் கேங் மெம்பர்கள் கடும் கோபத்தில் இருப்பதால் அவனது உயிருக்கு ஆபத்து இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே அவனது பாதுகாப்பு கருதி, பிரெண்டன் தனிமைச் சிறையில் வைக்கப்படுவான் என்றார் அவர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த இரண்டு கிழமைகளில் பிறந்தவர்கள்தான் அதிர்ஷ்டம் செய்தவர்களாம்! எந்த கிழமைனு தெரியுமா!
Next articleபொள்ளாச்சி விவகாரம்! தந்தையின் பார்வையில் மகளின் வேதனை! வீடியோ!