நாளை முதல் அதிகரிக்கப்படும் மின்சார கட்டணம்!

0

நாளை முதல் அதிகரிக்கப்படும் மின்சார கட்டணம்!

இலங்கையில் மின்சார கட்டணத்தை பாரியளவு அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75 சதவீதம் அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

நாளைய தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த மின்கட்டண அதிகரிப்பிற்கான அனுமதி மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

பல தடவைகள் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்தடவையாக இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள‌ அதிஷ்டம்!
Next articleவவுனியாவில் மற்றுமொரு கோவிட் மரணம்!