4 ஆம் எண்ணில் பிறந்தவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

0

நீங்கள் 4 ம் எண்ணில் பிறந்தவரா? இதோ உங்களைப் பற்றிய சில வரிகள்? தெரிந்து கொள்வோமா?

எண் 4 (4, 13, 22, 31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

நான்கு திசைகள், நான்கு வேதங்கள் மற்றும் நான்கு உபாயங்கள் என நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பும் தனித்தன்மைகளும் வாய்ந்ததாகவே காணப்படுகின்றது. 4, 13, 22 மற்றும் 31 ம் திகதிகளில் பிறந்தவர்கள் பொதுவாக நான்காம் எண்ணுக்கு உரியவர்களாகிறதுடன், நான்காம் எண்ணுக்குரிய கிரகமாக ராகுவும், ஆங்கில எழுத்துக்களாக னுஇஆஇவு ஆகியனவும் உள்ளன. இங்கு, ராகு ஒரு சாயாகிரகம் ஆகும்.

குண இயல்புகள் எவ்வாறு இருக்கும்

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டிருப்பதனால், அவர்களிடம் அதிகளவான பிடிவாத குணம் காணப்படுவதுடன், இவர்களுக்கு அடக்கமாகவோ, விட்டுக் கொடுத்து பண்பாக பேசத் தெரியாது. அதாவது, இவர்கள் எப்போதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவார்களாயினும், இவர்களின் பேச்சு நன்கு அழுத்தம் திருத்தமாகவும் திட்ட வட்டமாகவும் அமையும். இவர்கள் மிகுந்த தைரியசாலிகளாக அதாவது பிறருடைய அந்தஸ்து, வளம், செல்வம் மற்றும் அவர்களுக்கு பின்னால் இருக்கும் பலம் பற்றிய சிறிதளவான தயக்கம் ஏதுமின்றி மனதில் பட்டதை தைரியமாகவும் வெளிப்படையாகவும் கூறக்கூடிய இயல்பு கொண்டவர்களாக காணப்படுவார்கள்.

இவர்கள் தாங்கள் செல்லும் எல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்கள் நிலை நிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்துகளை சிறிதும் செவி கொடுத்து கேட்க மாட்டார்கள். மேலும், சண்டை போடுவது போல எப்பொழுதும் இவர்களின் குரல் உச்ச ஸ்தானியில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். எவ்வளவுதான் நல்ல பயன்கள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள் தமது ஒளிவு மறைவற்ற அதிகாரமான பேச்சின் காரணமாக பல இன்னல்கள் சந்திக்க வேண்டியேற்படும்.

இவர்களிடம் இந்த உலகத்தில் தனக்கு தெரியாத விஷயங்கள் எதுவும் இல்லை என்ற ஆணவம் அதிகளவில் காணப்படுவதுடன், அவர்கள் பொதுவாக புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசைப்படமாட்டார்கள் எனினும் எல்லோரும் தமது கருத்துக்களை நன்கு புரிந்து கொண்டு மனதார பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்ப்பார்பவர்களாக இருப்பதனால், இவர்களை உண்மையாக புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை நன்கு அனுசரித்துச் செல்ல முடியும்.

பொதுவாகவே இவர்கள் எதிலும் சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாகவும், பொது நல காரியங்களுக்காக தமது உயிரை கூட தியாகம் செய்ய தயங்காதவர்களாகவும், எந்தவொரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் ஒரு தீவிரவாதியாக செயல்படுவதுடன், திடீர் அதிர்ஷ்டங்களைக் காட்டிலும் சொந்த உழைப்பில் முன்னேறுவதிலேயே அதிகளவில் நாட்டம் கொண்டவர்களாகவம் காணப்படுவர். இவர்கள் காதல் விவகாரங்களில் ஈடுபடுபட்டாலும், அதில் முழுமையான வெற்றி கிடைப்பதில்லை என்பதுடன், சிலர் நடுத்தர வயதுக்கு மேல் ஞானிகள், துறவிகள் போல தமது வாழிக்கையை மாற்றி விடுவதும் உண்டு. எதுஎவ்வாறாயினும் இவர்கள் எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராயந்த பிறகே அது பற்றிய முடிவினை தீர்மானிப்பார்கள்.

உடல் அமைப்பு மற்றும் ஆரோக்கியம் எப்படி

நான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நடுத்தர உயரமும், வட்ட வடிவமான முகத்தோற்றமும் கொண்ட சற்று தடித்த உடலமைப்பை பெற்றிருப்பதுடன், இவர்களுக்கு எப்பொழுதும் ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். கருப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருக்கக் கூடிய இவர்களுடைய கால்கள் உடலுக்கு கேற்றபடி இல்லாமல் குறுகலாக இருப்பதுடன், மற்றவர்கள் ஒருமுறை பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய உருவ அமைப்பைப் பெற்றிருப்பார்கள்.

மேலும், இவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதனால் உடல் சோர்வு, முதுகு தண்டு வலி மற்றும் மூட்டு வலி போன்ற உபாதைகளும், மன உளைச்சல்களும்; அதிகளவில் காஷப்படும். பொதுவாக இவர்கள் தேவையற்றவைகளுக்கெல்லாம் குழப்பிக் கொள்ளக் கூடியவர்களாக இருப்பதுடன், காரமான பொருட்களை அதிகம் விரும்பி உண்பதனால் வயிறு தொடர்பான வியாதிகள் மற்றும் வாயுத் தொல்லைகள் ஏற்படுவதுடன், சிறுநீரகக் கோளாறு, வறட்டு இருமல், சளி மற்றும் சுவாச கோளாறு போன்றவைகளினால் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும்.

குடும்ப வாழ்க்கை எப்படி அமையும்

நான்காம் எண்ணுரிக்குரியவர்கள் இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்று விடக்கூடிய சூழ்நிலைகள் மிக அதிகளவில் காணப்படுவததனால் இவர்களுக்கு குடும்பத்தை நடத்தக்கூடிய இளமையிலேயே பொறுப்பு அமைந்து விடுவதுடன், அதற்கேற்றால் போல இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் அமைதியுடனும், தெய்வ பக்தியுடனும் அமைந்து விடுவதனால் கணவன், மனைவி இருவருக்கும் பிரச்சினைகள் வருவதென்பது மிகவும் அரிது என்ற வகையில் குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரையில் இவர்கள் மிகமிக அதிர்ஷ்ட சாலிகள் என்றே தான் கூறவேண்டும். எனினும், இவர்கள் எளிதில் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிபணியக் கூடியவராக இருப்பதனால், இவர்கள் எதிலும் கவனமுடன் நடந்து கொண்டால் இவர்களின் குடும்ப வாழ்க்கை ஏனையோர் பின்பற்றக்கூடியதாக அமையும் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

பொருளதாரம் நிலைமை

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படுவதனால் பணம் எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கும். பொதுவாக இவர்கள் தாராள மனம் கொண்டவர்கள் என்பதால் யாராவது கஷ்டத்தை சொல்லி உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விடுவார்கள் என்ற வகையில் இவர்கள் செய்யும் செலவுகள் வீண் செலவுகாகஅமைவதில்லை. எவ்வாறாயினும், இவர்கள் தமது சொந்த செலவுக்காக திண்டாட வேண்டிய நிலைமை ஏற்பட்ட போதிலும்; எதையும் துணிவுடன் சமாளிக்கும் ஆற்றல் இவர்களிடம் காணப்படும்.

தொழில் அமைப்பு எப்படி

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழில் செய்தாலும் நாம் நன்றாக இருக்கிறோமோ இல்லையோ மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்படுவபவர்களாக உள்ளதனால் தாம் செய்யும் தொழிலில் அதிக அக்கறையும் கவனமும் கொண்டிருப்பார்கள். இவர்கள் பொதுவாக அரசாங்க உத்தியோகத்தில் பெரிய அதிகாரிகளாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பினும் பலர் அடிமைத் தொழில் செய்பவர்களாகவே காணப்படுவார்கள்.

மேலும், ஹாஸ்டல், ஹோட்டல் நடத்துபவர்களாகவோ, ஆல்கஹால் போன்றவை கலந்த மருந்துகளையும் விற்பனை செய்பவர்களாகவோ, அச்சுத் தொழில், இயந்திரத் தொழில், இன்ஜினியர்ஸ் மற்றும் பௌதீக ஆராய்ச்சி தொழில் போன்றவற்றிலும் இவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்;.

நண்பர்கள் மற்றும் பகைவர்களின் நிலை

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் பொதுவாக முரட்டு சுபாவம் கொண்டவர்கள் என்பதனால் இவரக்ளுக்கு நண்பர்கள் அமைவது சற்றுக் கடினமான காரிமாயினும், இவர்களின் தாராள குணம் காரணமாக சில நண்பர்கள் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலம், 5 மற்றும் 8 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும் 1 மற்றும் 29 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் இணைந்து ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்களாகவும் காணப்படுவர்.

ராகுவுக்குரிய காலம் எது

இங்கு ராகுவுக்கு என தனிப்பட்ட முறையில் நாள் எதுவும் இல்லாமையினால் ஜோதிட, சாஸ்திர ரீதியாக சனிக்கிழமையினை ராகுவுக்கு உரியதாக கருத முடிவதுடன், தினமும் ராகு காலம் என்று ஒன்றரை மணி நேரம் ராகுவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதனால் இந்த நேரத்தில் எந்தவொரு சுபகாரியத்தையும் செய்யாதிருப்பது நல்லது.

ராகுவுக்குரிய திசை எது

ராகுவுக்குரிய திசையாக தெற்கு திசை உள்ளதுடன், பாலைவனங்கள், புற்று, சுரங்கம், ஓட்டு வீடு, குகைகள், சுடுகாடு, பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் உலர்ந்துபோன் நிலங்கள் போன்றவை ராகுவுக்கு சொந்தமான இடங்களாக காணப்படுகின்றன.

ராகுவுக்குரிய அதிர்ஷ்ட கல் எது

நான்காம் என் ராகுவின் ஆதிக்கத்தில் இருப்பதனால் 4 ஆம் எண் உடையவர்கள் கோமேதகத்தை தேனின் நிறத்தைக் கொண்ட கோமேதகத்தை அணிவதனால் உடல் நலம் மேம்படுவதுடன், மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழில் மேன்மை, செல்வம், செல்வாக்கு உயர்ந்து அனைத்து நற்பலன்களும் உருவாகும்.

பரிகாரங்கள் என்ன‌

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது சிறப்பான பலனைத் தருவதுடன், ராகு காலங்களில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு போன்ற நாட்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்வதுடன், ராகு காலங்களில் சரபேஸ்வரரையும் வழிபடலாம்.

அதிர்ஷ்டம் தருபவைகள்

அதிர்ஷ்ட திகதி, -1,10,19,28

அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்

அதிர்ஷ்ட திசை -கிழக்கு

அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு

அதிர்ஷ்ட கல் – கோமேதகம்

அதிர்ஷ்ட தெய்வம்- துர்க்கை

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதற்போது அதிகமாக மனித முகத்தில் பிறக்கும் ஆட்டுக்குட்டிகளால் பரபரப்பு!!
Next articleநவராத்திரி விரதத்தினை கடைப்பிடிப்பதனால் கிடைக்க கூடிய பலன்கள்!!