நான்கு மணிநேரம் கணவனால் பெண் அனுபவித்த சித்ரவதை… எதற்காக தெரியுமா?

0
511

வரதட்சணை கேட்டு மனைவியை கயிற்றில் கட்டி தொங்க விட்டு தாக்கிய வீடியோவை வாட்ஸ்ஆப்பில் மனைவியின் வீட்டாருக்கு கணவர் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசம் ஷாகன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் தனது ஷாஜகானுக்கும், அனுஷாவிர்க்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமானது. திருமணம் நிச்சயித்தபோது வரதட்சணையாக ஒரு லட்சம் தருவதாக சொல்லப்பட்டது. ஆனால் திருமணத்தின்போது ஐம்பதாயிரம் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, கடந்த சில சில தினங்களாக மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மீதமிருக்கும் 50 ஆயிரம் ரூபாயை வரதட்ணையாக கேட்டுள்ளார். பணம் தர மறுத்த தனது மனைவியை பெல்டால் அடித்துள்ளார். நான்கு மணி நேரம் கொடூரமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அந்த பெண் மயக்கமடைந்தார்.

இந்நிலையில், மயக்கமடைந்த தனது மனைவியை துப்பட்டாவை பயன்படுத்தி கைகளை கட்டி தொங்க விட்டு பின்னர் அதை வீடியோவாக பதிவு செய்து அந்த பெண்ணின் வீட்டிற்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பினார். அத்துடன் பணம் தரும் வரை துன்புறுத்துக்கொண்டு தான் இருப்பேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, பொலிசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து சென்று கைகள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்த அந்தப் பெண்ணை மீட்டு அவர்களது வீட்டில் ஒப்படைத்தனர். மேலும் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், தலைமறைவாகியுள்ள அவர்களை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வரதட்சணைக்காக இளம் பெண்ணை கயிற்றில் தொங்கவிடப்பட்டு துன்புறுத்தும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: