உங்கள் ஆண்மையை வீரியப்படுத்தும் ஆனந்த லேகியம்…! தயாரிக்கும் முறை! Anantha Legiyam

0

இன்றைய மாறிவிட்ட வாழ்க்கைச்சூழலில் நம்முடைய பழக்க வழக்கங்களாலும் உண்ணும் உணவாலும் ஆண்மைக்குறைவு பிரச்னை அதிகமாகிக் கொண்டே போகிறது.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு நம்முடைய முன்னோர்கள் ஒரு லேகியத்தைப் பயன்படுத்தி வந்தனர். அந்த லேகியத்துக்கு பேர் என்ன தெரியுமா?… ஆனந்த லேகியம்… அதை எப்படி செய்யணும்னு தெரியுமா?

ஆனந்த லேகியம் தயாரிக்கும் முறை Anantha Legiyam Thayarikum Murai

மாம்பழச்சாறினை மூன்று கப் அளவுக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.

அதில் ஒரு கப் அளவுக்கு சர்க்கரையைச் சேர்த்து பாகு பதத்துக்கு காய்ச்சுங்கள்.

அதன்பின் அதில் சுக்கு, பேரிச்சங்காய், அரிசித் திப்பிலி, பரங்கிப்பட்டை, நிலப்பனைக்கிழங்கு, பூமிச்சர்க்கரைக் கிழங்கு ஆகியவற்றைப் பொடியாகவோ சூரணமாகவோ நாட்டு மருந்துக் கடைகளில் விற்கும். அதை வாங்கி, அந்த பாகிற்குள் போட வேண்டும்.

அதையடுத்து அந்த பாகுக்குள் அரை கப் நெய் விட்டுக் கிளறி, 100 மில்லிகிராம் அளவுக்கு தேன் சேர்த்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

இதற்கு பெயர் தான் ஆனந்த லேகியம். இதைத்தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டு வர, விந்து வீரியம் பெறும். ஆண்மைத்தன்மையும் அதிகரிக்கும்.

இந்த லேகியத்தை தினமும் இரவு தூங்கும் முன் தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டு வர வேண்டும். இரவு உணவுக்குப்பின் இந்த லேகியத்தைச் சாப்பிட்ட பின், மலம் கழித்தல் கூடாது. லேகியத்தின் வீரியம் குறைந்துவிடும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடல் எடையை வேகமாக குறைக்கும் இலவங்கப்பட்டையை இப்படி பயன்படுத்துங்கள்!
Next articleதினசரி உணவாக வெறும் பாதாமை இந்த மாதிரி சமைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!