நாடாளுமன்றத்தில் ‘தமிழில்’ பேசி அதிர வைத்த எம்.பிகள்! வைரல் வீடியோ!

0
385

நாடாளுமன்றத்தில் பதிவியேற்ற தமிழக எம்பிக்கள் தமிழில் பதவி பிரமாணம் ஏற்றது அனைவரின் வாழ்த்தையும் பெற்றுள்ளது.

பெரும்பாலான எம்பிக்கள் தமிழ் வாழ்க என கோஷமிட்டு நாடாளுமன்றத்தையே அதிர வைத்தனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த எம்.பிகள் தங்களின் பதவியை ஏற்றுக்கொண்டனர்.

இதில், தமிழ்நாட்டை சேர்ந்த எம்பிக்கள் அனைவரும் தமிழிலேயே பதவி ஏற்றுக் கொண்டார்கள். அதோடு தமிழ் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என முழக்கமிட்டனர்.

இந்நிலையில் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி பதவி பிரமாணம் செய்த பின்பு ‘தமிழ் வாழ்க’, பெரியார் வாழ்க என குறிப்பிட்டார். அப்போது பாஜக எம்பிக்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூச்சலிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், டிவிட்டரில் தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டாக்-யும் அதிக அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள்! அஸ்கிரிய பீடம் முக்கிய கோரிக்கை!
Next articleஒரே ஒரு பார்வையால் லட்சக்கணக்கானவர்களை அடிமையாக்கிய குட்டி தேவதை! யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்!