நவீன தொழில்நுட்பத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் கேரளா பெண்கள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

0
459

ஸ்மார்ட்போன், ஆப்ஸ், பணப்பரிமாற்றம் என பெரிய ஹைடெக் தொழிலாக பாலியல் தொழில் மாறியுள்ளது சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கேரள மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் அரசு சாரா அமைப்புகள் நடத்திய ஆய்விலேயே இது தெரியவந்துள்ளது.

வாடிக்கையாளர்களை, ஸ்மார்ட்போன் மற்றும் ஆப்ஸ் வழியாக பாலியல் தொழிலாளிகள் தொடர்பு கொள்கிறார்கள்.

வாட்ஸ் ஆப் வாயிலாக சந்திக்கும் இடங்களை உறுதிப்படுத்திக்கொண்டு குறிப்பிட்ட இடத்திற்கு செல்கிறார்கள்.

இதுகுறித்து கேரள மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் ரமேஷ் கூறியதாவது, அதிகமான பெண்கள் தங்கள் வீட்டின் வறுமை காரணமாக இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர்.

இரண்டாவதாக, பகுதி நேர வேலையாக இதனை பார்க்கின்றனர், மூன்றாவதாக ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு பணம் தேவை என்பதால் இதுபோன்ற பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

தற்போது கேரளாவில் 15,802 பெண் பாலியல் தொழிலாளிகள் மற்றும் 11,707 ஆண் பாலியல் தொழிலாளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: