நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம். 12 ராசிகளுக்கும் பொருத்தமான அதிர்ஷ்ட கற்கள்.

0

ஒவ்வொரு ராசி கற்களுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கும். அந்தவகையில், நவக்கிரகங்களுக்கும் ஒவ்வொரு ராசி கற்கள் உண்டு.

நவரத்தின கற்கள் பதித்த நவக்கிரக மோதிரம் ஒருவருக்குப் பொருந்திவிட்டால் அவர் மிகச் சிறந்த அதிஷ்டசாலி என்று தான் சொல்ல முடியும்.

நவ அம்சங்கள் உங்களுக்குப் பொருந்தும் என்று தான் அர்த்தம். அதாவது சாதனை படைப்பதில், வெற்றி பெறுவதில், குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு, அந்தஸ்து, உயர் பதவி என அனைத்தும் உங்களுக்கு உங்களுக்கே உரியதாக இருக்கும். உழைப்பிற்கு முழுமையான பலன் கிடைப்பதோடு, வெற்றியும் கிடைக்கும். ஆனால், நவரத்தினம் பொருந்திய நவக்கிரக மோதிரம் அனைவருக்கும் ஏற்றுபுடையதாய் இருக்காது.

இந்த நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்…..?

மேஷ ராசி, மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள் மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவரும் இந்த நவரத்தினத்தை அணியலாம்.

ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம். கிரகஸ்தர்கள் (திருமணமானவர்கள்), இரவில் அணியக் கூடாது. பெண்கள் நவரத்தின மோதிரத்தை அணிவதால் கிரக தோஷம் ஏற்படும். ஜாதகத்தை நன்கு ஆய்வு செய்து அதற்குத் தகுந்தாற்போல் கற்களின் வடிவமைப்பும் உலோகத்தையும் இணைத்து அணிந்தால் மட்டுமே எண்ணிய பலன்கள் அளிக்கும்.

எண் கணிதப்படி 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.

பிறவி எண் 2,7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணியக் கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதிரம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்து பின்பு தான் அணிந்துகொள்ளலாம். இல்லையெனில் சாதகமற்ற சூழல் ஏற்படலாம்.

12 ராசிக்களுக்கும் பொருத்தமான அதிர்ஷ்ட கற்கள்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் அணியவேண்டிய ராசிக்கல் பவளம். இதை அணிந்தால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். தொழில் செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்தும். பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் அணியவேண்டியது வைரம். இதனால் நல்ல அதிர்ஷ்டத்தையும் உருவாக்கும். வெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் போன்றவற்றை கொடுக்கக் கூடியது.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். மேலும் புதன் திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். இது தொழில் விருத்தியைக் கொடுக்கும். அதிர்ஷ்டம் தரும்.

கடகம்: கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது செல்வ விருத்தியைக் கொடுக்கும். அமைதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இது மிகுந்த அதிர்ஷ்டத்தைத் தரும். வாழ்வில் உயர்வைத் தரும். நினைவாற்றலை அதிகப்படுத்தும். தொழிலில் லாபம் கிட்டும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். பேச்சாற்றலை வளர்க்கும். உடல் வளர்ச்சி பெரும். மரகதக் கல்லை உற்று நோக்கினாலே புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இது மகிழ்ச்சியையும், யோகத்தையும் தரக்கூடியது. நல்ல வசீகரத்தைத் தரும்.

விருச்சிகம்: விருட்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிட்டும். கோபம் குறையும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். குரு திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம். இதை அணிந்தால் மன நிம்மதியைக் கொடுக்கும், நல்ல செல்வத்தைக் கொடுக்கும்.

மகரம்: மகர ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். தெய்வீக சிந்தனையைத் தரும். நல்ல செல்வ வளத்தைக் கொடுக்கும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். இதை அணிவதால் செல்வ வளம் பெருகும். சமூகத்தில் நல்ல செல்வாக்கு கிடைக்கும்.

மீனம்: மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். வியாழன் திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 25.02.2021 Today Rasi Palan 25-02-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 02.03.2021 Today Rasi Palan 02-03-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!