நவம்பர் மாதத்தில் துரத்தும் சந்திராஷ்டமம் ! எந்தெந்த ராசி ரொம்ப உஷாரா இருக்கனும்னு தெரியுமா?

0

சந்திராஷ்டம நாட்களில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்பார்கள். காரணம் அன்றைக்கு ராசிக்கு சந்திரன் மறைவு எடுக்கும் முக்கிய முடிவுகள் எல்லாமே தவறாகவே போய்விடும் என்றுதான் அவ்வாறு சொன்னார்கள்.

பொதுவாக கிரகங்கள் எட்டாம் வீட்டில் இருப்பது சில பாதிப்புகளை ஏற்படுத்தும். எட்டாம் இடம் மறைவு ஸ்தானம். ஆயுள் ஸ்தானத்தில் கிரகங்கள் மறைவது நல்லதல்ல. அதுவும் மனோகாரகன் சந்திரன் எட்டாம் வீட்டில் மறைவது பாதிப்பை ஏற்படுத்தும் எனவேதான் இன்றைக்கு நமக்கு சந்திராஷ்டமம் இருக்கிறதா என்று பார்த்து விட்டு அடுத்த வேலையை பார்க்கப் போவார்கள்.

சந்திராஷ்டமம் என்றாலே எல்லோருக்கும் பயம் வருவதற்குக் காரணம் ஏதேனும் கெடுதல் நடந்து விடுமோ என்ற அச்சம்தான். நவம்பர் மாதத்தில் சந்திரன் மூலம் ராசியில் தொடங்கி வரிசையாக 12 ராசிகளிலும் பயணிக்கிறார். நவம்பர் முதல் நாளில் சந்திரன் தனுசு ராசியில் இருக்க ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குகிறது. மேஷம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்போது சந்திராஷ்டமம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
நவம்பர் 26 காலை 03.44 மணி முதல் நவம்பர் அதிகாலை 07.33 வரையும் சந்திராஷ்டமம் உள்ளது. நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. ரசகுல்லா சாப்பிடுங்க நல்ல பரிகாரம்.

ரிஷபம்
நவம்பர் 1 காலை முதல் நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை 05.26 வரை சந்திராஷ்டமம் உள்ளதால் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. பாலில் செய்த இனிப்பு பொருட்கள் சாப்பிட்டு விட்டு வெளியே செல்லுங்கள்.

மிதுனம்
நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை 05.26 முதல் நவம்பர் 5ஆம் தேதி மாலை 04.47 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. வெள்ளை நிற ஆடை அணியுங்கள். தயிர் சாதம் சாப்பிடலாம்.

கடகம்
நவம்பர் 5ஆம் தேதி மாலை 04.47 மணி முதல் நவம்பர் 8ஆம் தேதி அதிகாலை 05.29 வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. வெள்ளை நிற இனிப்புகள் சாப்பிடலாம். பால் இனிப்புகளை தானம் செய்யுங்கள்.

சிம்மம்
நவம்பர் 8ஆம் தேதி அதிகாலை 05.29 முதல் நவம்பர் 10 ஆம் தேதி மாலை 05.18 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. வெள்ளை நிற ஆடை அணிந்து வெளியில் செல்லுங்கள்.

கன்னி
நவம்பர் 10 ஆம் தேதி மாலை 05.18 மணி முதல் நவம்பர் 13ஆம் தேதி 03.10 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. பாலில் செய்த இனிப்புகள் அல்லது பால் சாதம் சாப்பிடலாம்.

துலாம்
நவம்பர் 13ஆம் தேதி 03.10 மணி முதல் நவம்பர் 15 காலை 11 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. ரசகுல்லா சாப்பிடுங்கள் நல்லதே நடக்கும்.

விருச்சிகம்
நவம்பர் 15 காலை 11 மணி முதல் நவம்பர் 17 ஆம் தேதி மாலை 5.05 மணிவ வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. இந்த நாட்களில் மிளகு சேர்த்து தயிர் சாதம் சாப்பிடுங்கள் பாதிப்புகள் குறையும்.

தனுசு
நவம்பர் 17 ஆம் தேதி மாலை 5 மணி முதல் நவம்பர் 19ஆம் தேதி இரவு 9.22 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. ரசகுல்லா சாப்பிடுங்கள் நல்லதே நடக்கும்.

மகரம்
நவம்பர் 19ஆம் தேதி இரவு 9.22 மணி முதல் நவம்பர் 22ஆம் தேதி பகல் 12.03 மணிவரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. இந்த நாட்களில் தயிர் சாதம் சாப்பிடலாம் நன்மையே நடக்கும்.

கும்பம்
நவம்பர் 22ஆம் தேதி பகல் 12.03 மணி முதல் நவம்பர் 24 நள்ளிரவு 1.45 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் வேகமாக போக வேண்டாம் மெதுவாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

மீனம்
நவம்பர் 24 நள்ளிரவு 1.45 மணி முதல் நவம்பர் 26 அதிகாலை 3.44 மணி வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. சந்திரனுக்கு பிடித்தமான பாலில் செய்த உணவுகளை சாப்பிடலாம் பாதிப்புகள் குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஈழத்து தர்ஷன் விடுத்த முக்கிய அறிவிப்பு! மகிழ்ச்சியின் உச்சத்தில் இலங்கை ரசிகர்கள் !
Next article2019 நவம்பர் மாத ராசிக்கு சுக்கிரன் நன்மை செய்ய போகிறார் தெரியுமா?