நவம்பர் மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப அதிர்ஷ்டம்! உங்களது ராசி இருக்குதா?

0
1198

நவம்பர் மாதத்தில் நவகிரகங்களின் நாயகன் சூரியன் தமிழ் மாதங்களில் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் நீச நிலையிலும் விருச்சிக ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் கிரகப் பெயர்ச்சியை பார்த்தால் செவ்வாய் பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு நகர்கிறார். புதன் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் விருச்சிகத்தில் இருந்து மாத இறுதியில் தனுசு ராசிக்கு நகர்கிறார். ராகு மீனம் ராசியிலும் சனி கேது குரு கூட்டணி தனுசு ராசியிலும் இணைந்துள்ளது.

இந்த மாதம் பல முக்கிய பண்டிகைகள் உள்ளன. கந்த சஷ்டி விரத காலம் இது நவம்பர் 2ஆம் தேதி திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் நடைபெறுகிறது. குரு பெயர்ச்சி நவம்பர் 5ஆம் தேதி திருக்கணிதப்படி நடைபெறுகிறது. எதிரிகள் தொல்லை நீங்கும். நவம்பர் 9ஆம் தேதி சனி மகா பிரதோஷம் வளர்பிறை பிரதோஷம் விஷேசமானது. நவம்பர் 12ஆம் தேதி ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் நடைபெறும். நவம்பர் 13 ஆம் தேதி கிருத்திகை விரதம். நவம்பர் 24 தேய்பிறை பிரதேஷம். நவம்பர் 26 கார்த்திகை அமாவாசை

இந்த கிரக சஞ்சாரத்தின்படி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், சுபகாரியங்கள் என்னென்ன நடக்கும், பாதிப்புகளுக்கு பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.

கடன் வாங்க வேண்டாம்
செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே உங்க ராசிக்கு 3ஆம் வீட்டில் ராகு சஞ்சரிக்கிறார். சூரியன் ஏழு மற்றும் எட்டாம் வீடுகளில் சஞ்சரிப்பார். புதன் வக்ரமடைந்து சஞ்சரிப்பார். சுக்கிரன் 8ல் இருக்கிறார். செவ்வாய் ராசிநாதன் 6 ஆம் வீட்டிலும் பின்னர் ஏழாம் வீட்டிற்கும் நகர்வார். உடல் நலத்தில் அக்கறை தேவை. சூரியன் நீச நிலையில் இருக்கும் பேச்சில் கவனமாக இருக்கவும். கால கட்டத்தில் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும். மாணவர்களுக்கு நல்ல மாதம். நிதி நிலைமை சீராகும். வங்கியில் இருந்து லோன் கிடைக்கும். கடன் அதிகம் வாங்க வேண்டாம். கவனமாக தேவையான அளவிற்கு மட்டும் வாங்கவும். திருமணத்திற்காக பேசுபவர்கள் வரன்களை கவனமாக விசாரித்து பார்த்து தேர்வு செய்வது அவசியம். வாழ்க்கைத்துறையை தேர்வு செய்வதில் நல்லதாக தேர்வு செய்வதில் தடுமாற்றம் ஏற்படும். குழந்தைகளை கண்காணிக்கவும். பெண்களுக்கு மறைமுக நோய்கள் வரும். அந்தரங்க விசயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

குருவினால் யோகம்
ஒன்பதாம் வீட்டில் சனி, கேது, குரு இணைந்திருப்பது யோகம். பாக்ய ஸ்தானத்தில் தர்ம கர்மாதிபதி யோகம் உள்ளது. வெளிநாடு யோகம் வரும். குழந்தை பாக்கியம் வரும் பணவரவு அதிகமாக வரும். அப்பாவின் உயிருக்கு இருந்த ஆபத்துக்கள் வரும். ராகுவினால் துர்க்கையின் அனுக்கிரகம் கிடைக்கும். தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கேது உடன் குரு இணைந்திருப்பதால் ஆன்மீக ரீதியான பயணங்கள் அற்புதங்களை ஏற்படுத்தும். பிசினஸ், தொழில் வருமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான மாதம் இது.

திருமணம் கைகூடும்
ராசி அதிபதி சுக்கிரன் உங்க ராசியை பார்க்கிறார். அற்புதமான மாதம். முகத்தில் ஜொலிப்பு கூடும். அழகான மாதம். கலைகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல மாதம். திருமணத்திற்கு தயாராகும் நீங்க வரன் பார்க்கலாம். திருமணம் கை கூடி வரும். என்றாலும் தடைகள் வரும். புனர்பு தோஷம் தடைகளை ஏற்படுத்தும் கவனமாக இருங்க. செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். காதல் மலரும் மாதம் இதுவாகும்.

நோய்களால் பிரச்சினை
கல்யாணத்திற்கு மனசு அலைபாயும் அதே நேரம் 12ஆம் தேதி செவ்வாய் ஆறாம் வீட்டிற்கு நகரும் போது எதிர்ப்பு அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். உரசல்கள் வரும். செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை சந்தோஷங்களை ஏற்படுத்தும். வெளிநாடு யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வரும். இதய பகுதியில் சில பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது கவனமாக இருக்கவும். மருத்துவர்களை கவனிங்க. முன்னேற்றமும் அதிர்ஷ்டமும் நிறைந்த மாதமாக அமைய மதுரை மீனாட்சியை வழிபடுங்க நல்லதே நடக்கும்.

வேலை கிடைக்கும்
புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே. உங்களுக்கு பொற்காலம் ஆரம்பித்து விட்டது. குருவின் பொன்னான பார்வை உங்களுக்கு கிடைத்து விட்டது. நீங்க சாமர்த்தியசாலிகள். பிரச்சினைகள் தீரும். கவலைகள் ஓடிப்போகும். அதிர்ஷ்டமும் அற்புதங்களும் நடைபெறும். ஐந்தாம் வீட்டில் உள்ள சூரியன் சந்தோஷங்களை தருவார். செவ்வாய் நான்காம் வீட்டில் இருந்து ஐந்தாம் வீட்டிற்கு செல்வது நல்ல காலம். எதிரிகள் பிரச்சினை தீரும். சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல மாதம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நல்ல லாபம் வரும்

தம்பதியர் பிரச்சினை
ராகுவினால் உங்களுக்கு பிரச்சினைகள் தீரும் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். புதிய வேலைகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நோய்கள் தீரும். கணவன் மனைவி இடையே பாசமும் நேசமும் அதிகரிக்கும். வெளிநாட்டு வருமானம் கூடும். ஆறாம் வீட்டில் உள்ள சுக்கிரனால் பெண்களுக்கு வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான மாதம். சூரியன் நவம்பர் 15ஆம் தேதிக்கு மேல் ஆறாம் வீட்டிற்கு போகும் போது கவனமாக இருங்க யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். கணவன் மனைவி இடையே சந்தோஷமாக இருங்க சின்னச் சின்ன சண்டைகளைக் கூட பெரிது படுத்த வேண்டாம். மவுனமாக இருப்பது நல்லது. குரு பகவானை வணங்க நல்லது நடக்கும்.

உடல் நலத்தில் கவனம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே. ராசிநாதன் சந்திரன் ஆறாம் வீட்டில் அமர்வது அற்புதம். 3ஆம் வீட்டில் செவ்வாய் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை மாற்றம் ஏற்படும். சுய தொழில் தொடங்கலாம். மாணவர்களுக்கு கல்வியின் மீதான ஈடுபாடு அதிகரிக்கும். செவ்வாய் பார்வை உங்க ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு கிடைப்பதால் உடல் நலம் மன நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். வயிறு பிரச்சினைகளும் வரலாம். தலைசுற்றல் பித்த நோய்கள் வரும் கவனம் தேவை.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு
சூரியன் புதன் இணைவு பிரச்சினைகளை ஏற்படுத்தும். நல்ல வேலை கிடைக்கும். சுக்கிரன் ஐந்தில் சஞ்சரிப்பதால் காதல் தொடர்பான பிரச்சினைகள் மனதை அலைபாய வைக்கும். சிக்கிக்கொள்ளாதீர்கள். மனதை அலைபாய விடாதீர்கள். பெண்களுக்கு நல்ல மாதம் பிசினஸ் அமோகமாக நடக்கும் லாபம் வரும். கணவன் மனைவி பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும் கவனமாக இருங்க. விட்டுக்கொடுத்து போங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். திருமணமாகி குழந்தைக்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். ஸ்ரீரங்கம் ரங்காதரையும், ஸ்ரீவில்லிபுத்தூர் தல சயனப் பெருமாளையும் வணங்க நல்லது நடக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 30.10.2019 !
Next articleசுவாதி முதல் ரேவதி வரை குருப்பகவனால் திடீர் யோகங்களை பெறபோவது எந்த நட்சத்திரகாரர்கள்?