குளிக்கும் போது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கிறீர்களா !இது எல்லாம் உங்களுக்கு தெரியுமா இதை உடனே படித்துவிடுங்கள் !

0

நீங்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பவரா? நன்மைகள் இதோ!

பாரம்பரியமாக பெண்கள் வெள்ளிக்கிழமையிலும், ஆண்கள் சனிக்கிழமையிலும் செய்யும் ஒரு செயல் தான் வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது. அதிலும் நல்லெண்ணெய் பயன்படுத்தி தான் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டுமென்ற ஐதீகமும் உள்ளது. இது ஒருவகையான ஆயுர்வேத முறை.

மேலும், நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது, அந்த நல்லெண்ணெயில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் சுக்கு ஆகியனவற்றை சேர்த்து, வெதுவெதுப்பாக சூடேற்றி, பின்னர் அந்த நல்லெண்ணெயை ஸ்கால்ப்பில் நன்கு படும்படி நன்கு தேய்த்து குளிப்போம். முன்னர்; நம் முன்னோர்களாலும் பெற்றோர்களாலும் தவறாமல் பின்பற்றப்பட்டு வந்த இந்த முறைகள் எல்லாம் தற்போது மறைந்துவிட்டது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

இதனால் தான் என்னவோ இன்றைய சந்ததியினருக்கு எதற்கெடுத்தாலும் நோய்த்தாக்கம் அதிகளவில் உள்ளது. எனவே, நீங்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ விரும்பினால் வாரம் ஒருமுறையாவது நல்லெண்ணெய் குளியல் செய்யுங்கள். இவ்வாறு குளிப்பதன் மூலம், நோய்களின் தாக்கம் குறைவடைவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். இவ்வாறாக, இங்கு வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் எடுப்பதனால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அடர்த்தியான முடி வளரும்

நல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதனால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் மிக நீளமாகவும் இருக்கும்.

உடல் சூட்டை தணிக்கும்

நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்து வரும் போது, உடலில் உள்ள அதிகப்படியான தேவையற்ற வெப்பம் வெளியேற்றப்படும்.

உடல் ரிலாக்ஸ்

வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் எடுத்து வரும் போது, உடலில் உள்ள நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.;

பொலிவான சருமம்

எண்ணெய் குளியல் என்று சொல்லும் போது, தலைக்கு மட்டுமின்றி, உடலுக்கும் நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவு பெறுவதுடன் மென்மையாகவும் இருக்கும்.

பொடுகு

பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால், பொடுகுத் தொல்லையில் இருந்து முழுமையாக விடுதலை பெற முடியும்.

நிம்மதியான தூக்கம்

தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வரும் போது, தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியும்.

கண்களுக்கு நல்லது

கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், கண்கள் சிவப்பாகி, கண்களின் ஆரோக்கியம் கெட்டுப்போகின்றது. எனவே, வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் செய்;வதன் மூலம், பார்வை மற்றும் கண்களின் ஆரோக்கியம் மேம்பட்டு துல்லியமான பார்வை கிடைக்கும்.

முடி உதிர்தல்

அதிகளவான முடி உதிர்தல் அதிகம் காணப்படும் போது, நல்லெண்ணெய் குளியலை வாரம் ஒருமுறை செய்து வரும் போது முடி நன்கு ஊட்டம் பெற்று வலிமையடையும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவைரலாகும் சிம்புவின் சிக்ஸ் பாக் வீடியோ! பாத்தா அசந்து போவீங்க இது நம்ம சிம்புவா..!
Next articleஅந்தரங்க பகுதியில் உண்டாகும் அரிப்புக்களை நீக்க சில எளிய வழிகள்!