நயன்தாராவுக்கு ரகசிய திருமணமா? நயன் இப்போது தேன்நிலவில் உள்ளாராம்.

0

சென்னை, ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் அமெரிக்காவில் தேனிலவை கொண்டாடி வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐயா படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து 12 வருடங்களாக தமிழில் நம்பர் 1 கதாநாயகியாக உள்ளார். ரூ.3 கோடி சம்பளம் நாயகியாகவும் உள்ளார். பல முன்னணி கதாநாயகிகள் வந்தும் அவரது மார்க்கெட் சரியவில்லை. தெலுங்கு, மலையாள பட உலகில் நயன்தாராவுக்கு வரவேற்பு உள்ளது. அங்கும் பல முன்னணி ஹீரோக்களுடன் அவர் நடித்து வருகிறார். சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் காதல் சச்சரவுகளால் அவ்வப்போது பரபரப்புக்கு ஆளாகி வருகிறார்.

இரண்டு முறை காதலித்து தோல்வியடைந்திருக்கிறார்.ஆரம்பத்தில் நயன்தாராவும், சிம்புவும் காதலித்தனர். அதனை தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். பின்னர் பிரபுதேவாவுடன் நெருங்கி பழகினார். அவருடன் தனி வீட்டில் வசித்தவந்தார். பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வதற்காக நயன்தாரா மதம் மாறியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்பே இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்து வருவதாக சொல்லப்பட்டது.அவருக்காக சென்னை எழும்பூரில் அடுக்குமாடி வீட்டை பரிசாக அளித்து அதில் இருவரும் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அவர்கள் மறுக்கவில்லை. அதே போல் சில மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவனுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை நயன்தாரா பரிசாக வழங்கினார். திடீரென நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் ரோம் நகருக்கு சென்று, போப் பிரான்சிஸிடம் ஆசி பெற்றார்

பின்னர் இருவரும் மோதிரம் மாற்றி ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகின. இந்த நிலையில் விக்னேஷ் சிவனுக்கு நேற்று பிறந்தநாள். இதை இருவரும் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக கடந்த வாரம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சென்றுள்ளனர். அவர்கள் ரகசிய திருமணம் செய்துகொண்டு விட்டு தேனிலவுக்காக அமெரிக்கா சென்றுள்ளதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு விலையுயர்ந்த பொருட்களை பரிசளித்ததுடன் அவர்கள் இருவரும் உள்ள புகைப்படங்களை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவரது பிறந்தநாளை நயன்தாரா ஜோடியாக கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார். இது பற்றி நயன்தாரா அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘விக்னேஷ் சிவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நாங்கள் புன்னகையுடன் பார்த்தோம். எல்லாமே மகிழ்ச்சி. கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும். இந்த ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக அமையட்டும். இது மிகவும் மகிழ்ச்சியான பிறந்தநாள். உங்கள் ரசிகர்கள் உங்களை தொடர்பவர்கள் அனைவருக்கும் இது சிறப்பான நாள்’ என்று குறிப்பிட்டுள்ளார். நயன்தாரா-விக்னேஷ் சிவன் அமெரிக்காவில் கோலாகலமாக பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.அதே போல் விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து இயக்கி வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பொங்கல் வெளியீடு போஸ்டரை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வெளியிட்டார்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிறுமியை கொன்றவருக்கு மக்கள் முன்னிலையில் தூக்குத் தண்டனை. ஈரான் அரசின் அதிரடி.
Next articleகார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜெய் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.