இனிமேல் செவ்வாய் கிழமைகளில் நகமோ அல்லது முடியோ வெட்டாதீங்க ஏன் தெரியுமா!

0
3987

நம் முன்னோர்கள் எந்த ஒரு காரணம் இல்லாமலும் எதையும் பின்பற்றமாட்டார்கள். அந்த வகையில் செவ்வாய் கிழமைகளில் முடி அல்லது நகம் வெட்ட கூடாது என்பதற்கும் காரணம் உள்ளது.

மேலும் செவ்வாய் கிழமைகளில் ஆண்கள் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்யவோ கூடாது என்று வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?

துர்கை மற்றும் லட்சுமி தினம்
செவ்வாய் கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய உகந்த நாளாக கருதப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் சில பகுதிகளில் செவ்வாய் கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது.

செலவு செய்ய கூடாது
செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் செவ்வாய் கிழமை. மேலும் இந்நாளில் நம்மிடம் உள்ள லட்சுமியை மற்றவருக்கு தானம் செய்தால், லட்சுமி சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையை உள்ளது.

வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள்
ஒரு சில வீடுகளில் வாரத்திற்கு ஒரு முறைதான் வீட்டை சுத்தம் செய்வார்கள். இதற்கு காரணம் வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.

செவ்வாய் கிழமைகளில் நகமோ அல்லது முடியோ வெட்டினால் என்ன நடக்கும்?
செவ்வாய் கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உரியது என்பது மட்டுமின்றி அன்று முடியோ அல்லது நகமோ வெட்டினால் துரதுர்ஷ்டம் வந்து விடும் என்று கூறுவார்கள்.
இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் இருந்து 8 மாதங்கள் குறைவதாக ஜோதிடம் சொல்கிறது.

எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வரும் என்றும் கூறப்படுகின்றன.

ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகக்வடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: