தினமும் 1 துண்டு இஞ்சி வெறும் வயிற்றில் ! சீனர்களின் ரகசியம் இதுதான்!

0
9762

ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒரு தனி விதமான பண்பாடும் கலாசாரமும் உள்ளது. பல நாடுகளின் கலாசாரமும், பழக்க வழக்கங்களும் மிகவும் வித்தியாசமாகவே இருக்கும். அந்த வகையில் சீனர்களும் அடங்குவர். நம்மில் பலருக்கு சீனர்களின் பல்வேறு விசித்திரமான நடைமுறைகளை பற்றி நன்கு தெரியும். அனைத்து துறைகளில் எப்படி சீனர்கள் முன்னிலையில் உள்ளனரோ அதே போன்று இவர்களின் கலாசாரத்திலும் இவர்கள் முன்னிலையில் உள்ளனர்.

இவர்கள் கடைபிடிக்கின்ற இது போன்ற விஷயங்கள் தான் அவர்களை நீண்ட ஆயுளுடன், அதிக புத்தி கூர்மையுடன் வைத்து கொள்கிறது. இந்த பழக்க வழக்கத்தில் இவர்கள் தினமும் சாப்பிட கூடிய இஞ்சும் சேரும். தினமும் காலையில் ஒரு சிறிய துண்டு இஞ்சியை சாப்பிடும் பழக்கம் சீனர்களுக்கு பரவலாக இருக்கிறது.

இது அவர்களின் மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்த கூடிய மூல பொருளாகவும் உள்ளது. உங்களின் தாம்பத்திய வாழ்க்கை முதல் புற்றுநோய் வரை அனைத்து வித பிரச்சினைக்கும் இந்த ஒரு துண்டு இஞ்சியை காலையில் உண்டாலே போதுமாம். எப்படி இது சாத்தியம் ஆகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஆராய்ச்சி..!
இஞ்சியை பற்றிய ஆயிர கணக்கான ஆராய்ச்சிகள் பல வித முடிவுகளை நமக்கு தந்துள்ளது. அதுவும் தினமும் காலையில் ஒரு துண்டு இஞ்சியை சாப்பிட்டு வந்தால் உடலில் அற்புதங்கள் ஏராளமாக நடக்கும். அதில் முதல் பயன், நம் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை அதிக ஆற்றல் மிக்கதாக மாற்றுவதே. எனவே, உங்களை எந்தவித நோய்களும் எளிதில் அண்ட முடியாது.

மூளையின் திறனுக்கு
உங்களின் மூளை எப்போதும் படு ஜோராக வேலை செய்ய வேண்டுமென்றால், அதற்கு 1 துண்டு இஞ்சியே போதுமாம். இது மூளையின் நரம்புகளை ஆரோக்கியமாக்கி, சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்கும். மேலும், எவ்வளவு வயதானாலும் உங்களின் ஞாபக திறன் அப்படியே இருக்குமாம்.

புற்றுநோய் செல்கள்
இஞ்சி மற்றும் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு அபூர்வ தகவல் வெளி வந்துள்ளது. அதாவது, இஞ்சியை தினமும் காலையில் 1 துண்டு சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை இது முழுவதுமாக தடுத்து விடுமாம்.

ரத்த ஓட்டத்திற்கு
தினமும் காலையில் 1 துண்டு இஞ்சியோடு உங்களின் நாளை தொடங்கினால் உடல் முழுவதும் சமமான அளவில் ரத்த ஓட்டம் இருக்கும். மேலும், ஆண்களின் உறுப்புகளுக்கு சீரான ரத்த ஓட்டத்தை தந்து தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

கொலஸ்ரால்
நமது உடலில் சேர்ந்துள்ள நச்சு தன்மை மிக்க ஒன்று தான் இந்த கெட்ட கொலஸ்ட்ரால். இவற்றை வெளியேற்ற கூடிய தன்மை இஞ்சியிற்கு உள்ளது. மேலும், வயிறு காரணமே இல்லாமல் உப்பி இருந்தால், அதையும் இது குறைத்து விடும்.

மாதவிடாய் வலிகளுக்கு
பெண்களின் வாழ்வில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்த கூடியது இந்த மாதவிடாய் வலி. தினமும் 1 துண்டு இஞ்சியை பெண்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் வலியில் இருந்து மிக சுலபமாக தப்பித்து கொள்ளலாம்.

சர்க்கரை நோயிற்கு
இந்த இஞ்சி பழக்கம் நமது உடலுக்கு அதிக நன்மைகளை தரும். அந்த வகையில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் இது குறைத்து விடும். அத்துடன் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பை இஞ்சி குறைக்குமாம்.

தசைகளுக்கு
ஒரு சின்ன வேலை செய்தாலும் உங்களின் தசை அதிக சோர்வு அடைகிறதா..? இந்த பிரச்சினைக்கு தீர்வை தர கூடிய தன்மை இஞ்சியிற்கு உள்ளது. தினமும் இஞ்சியை 1 துண்டு சாப்பிட்டு வந்தால் உங்களின் தசை அழற்சி, சோர்வு, தசை வலி போன்றவை நீங்கி ஆற்றலுடன் இருக்கலாம்.

உடல் எடை
இஞ்சியை தினமும் சாப்பிட்டு வருவதால் உடல் எடை கிடுகிடுவென குறைந்து விடும். குறிப்பாக 43 கலோரிகளை நமது உடலில் இருந்து கரைக்கும் தன்மை இதற்கு உள்ளதாம். உங்கள் உடலை சிக்கென்று வைப்பதற்கு இஞ்சி சிறந்த தீர்வு.

வாயு தொல்லை
மலச்சிக்கல், வாயு தொல்லை உள்ளவர்களுக்கும் இந்த இஞ்சி வைத்தியம் தீர்வை தருகிறதாம். எதை சாப்பிட்டாலும் அஜீரணமாகவே இருப்பவர்களுக்கும் இது நல்ல பலனை தரும். அதற்கு இஞ்சியை வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதும்.

மூட்டு வலி
இப்போதெல்லாம் குறைந்த வயதில் இருப்பவர்களில் பலருக்கு மூட்டு வலி ஏற்படுகிறது. மூட்டு பிரச்சினை இல்லாமல் இருக்க இஞ்சி உங்களுக்கு உற்ற நண்பனாக உதவும். மேலும், மூட்டில் ஏற்பட கூடிய வலியையும் இது குறைக்கும். எனவே, மேற்சொன்ன காரணங்களினால் தான் சீனர்கள் தினமும் இஞ்சியை சாப்பிட்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த பழக்கம் இனியும் வேண்டும்! அரிசியை எத்தனை முறை கழுவ வேண்டும் தெரியுமா?
Next articleஓரினச்சேர்க்கை எனக்கும் பிடிக்கும்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சியான பதிலை அளித்த பிரபல தொகுப்பாளினி..!