நண்பரின் வீட்டிற்கு நம்பி சென்ற இளம் பெண்: உறவினருக்கு நிர்வாண வீடியோவை அனுப்பிய பரிதாபம்!

0
482

இந்தியாவில் இளம் பெண் ஒருவரை, தொழிலதிபர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குஜராத்தின் சூரத் பகுதியைச் சேர்ந்தவர் Lalchand Tavari(35). ஆடை தொழிலதிபரான இவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் தென் மும்பையைச் சேர்ந்தவரும் பாடகியுமான 22-வயது மதிக்கத்தக்க பெண்ணை சந்தித்துள்ளார்(பெண்ணின் பெயர் தெரிவிக்கப்படவில்லை).

அப்போது நண்பர்களான இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசியுள்ளனர். நண்பர்களாக இருந்ததால் கடந்த மாதம் 18-ஆம் திகதி Lalchand Tavari அந்த பெண்ணை தன்னுடைய விருந்தினர் இல்லத்திற்கு அழைத்துள்ளார்.

இதனால் அப்பெண்ணும் நண்பர் என்ற முறையில் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கு குடிப்பதற்காக கொடுக்கப்பட்ட பழச்சாற்றில் Lalchand Tavar மயக்க மருந்தை கலந்துள்ளார்.

சுமார் நான்கு மணி நேரம் சுயநினைவை இழந்த அப்பெண்ணின் ஆடைகளை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ள அவர், அதை வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்துள்ளார்.

சுயநினைவு திரும்பிய பின்பும் அந்த பெண்ணிடம் இவர் நெருங்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்பெண் எதுவும் நடக்கவில்லை என்று நினைத்து அங்கிருந்து ஓடியுள்ளார்.

வீட்டிற்கு சென்ற அவருக்கு உடல்நிலை மோசமானதால், மருத்துவமனைக்கு சென்று சோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது மருத்துவர்கள் நீங்கள் குடித்த பழச்சாற்றில் மயக்க மருந்து கலந்துள்ளது என்பதை கூறியுள்ளனர்.

அதிர்ச்சியில் இருந்த அப்பெண்ணை தொடர்பு கொண்ட Lalchand Tavar அவரை மீண்டும் அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்ததால், மிரட்டியுள்ளார். அவரது உறவினர் மற்றும் சக நண்பர் ஒருவருக்கு எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து அவரது உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: