நடுவானில் மாயமான விமானம் 38 பேருடன் விபத்துக்குள்ளானதாக தகவல் ! பயணிகளின் கதி என்ன?

0
636

நடுவானில் மாயமான விமானம் 38 பேருடன் விபத்துக்குள்ளானதாக தகவல் ! பயணிகளின் கதி என்ன?

மாயம்: தென் அமெரிக்காவின் நாடான சிலியில் மாயமான இராணுவ விமானம் 38 பேருடன் விபத்துக்குள்ளானதாக சிலி விமானப்படை அறிவித்துள்ளது. சி-130 ஹெர்குலஸில் இராணுவ விமானத்தில் 17 பேர் விமானக் குழு உறுப்பினர்கள் மற்றும் 21 பயணிகள் இருந்துள்ளனர்.

விமானம் மதியம் 2:44 மணிக்கு புன்டா அரினாஸ் நகரத்திலிருந்து சிலி அண்டார்டிக் நோக்கி புறப்பட்டது. இரவு 7:17 மணிக்கு விமானம் அண்டார்டிக் பிரதேசத்தில் உள்ள ஆர்ட்டுரோ பிராட் தளத்தில் தரையிங்கியிருக்க வேண்டும். கடைசியாக தெற்கு சிலியில்விமானம் காணப்பட்டதாக ரேடார் மூலம் கண்டறியப்பட்டது. தேசிய வசதிகளுக்கு ஆன்டிகோரோசிவ் சிகிச்சையை மேற்கொள்ள மற்றும் தளவாட பணிகளுக்கு உதவ, பணியாளர்களுடன் விமானம் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்திலிருந்து கடைசி அறிக்கை மாலை 5:44 மணிக்கு வழங்கப்பட்டுள்ளது. திட்டங்களின்படி மாலை 6:13 மணிக்கு புதிய அறிக்கையை வழங்கியிருக்க வேண்டும், ஆனால், அது வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் தகவல்களின்படி, விமானத்தில் இன்னும் இரண்டு மணி நேரம் இயங்கும் அளிவிற்கு எரிபொருள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த நபர்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.விமானம் கடலில் விழுந்திருக்கும் என சந்தேகிப்பதாகவும், தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: