நடுரோட்டில் மனைவியின் சடலத்துடன் போராடிய மருத்துவருக்கு இறுதியில் கிடைத்த வெற்றி!

0
410

கோவையில் மனைவியின் சடலத்துடன் மருத்துவர் ரமேஷ் நீண்ட நேரம் போராடியதை அடுத்து, அப்பகுதியில் இருந்த மதுக்கடையை மூடி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கோவையை சேர்ந்த மருத்துவர் ரமேஷ், இயற்கையின் மீது அலாதி பிரியம் கொண்டவர். சமூகநல போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்பவர். இவர் அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு வெறும் 30 ரூபாய்க்கு சிகிச்சையளித்து வருகிறார்.

இந்த நிலையில் தனியார் பள்ளியில் படிக்கும் ரமேஷின் மகளை அவருடைய மனைவி சோபனா நேற்று ஸ்கூட்டரில் அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.

அப்போது மதுபோதையில் வந்த இளைஞர்கள் திடீரென அவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதில் சோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடைய மகள் பலத்த காயமடைந்திருக்கிறார்.

இந்த சம்பவம் அறிந்து ஓடிவந்த ரமேஷ், மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார். மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை கூட பொருட்படுத்தாமல், அந்த இடத்திலேயே தன்னந்தனியாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

“டாஸ்மாக்கிற்கு என் மனைவியே கடைசி பலியாக இருக்கட்டும்” என்கிற கோரிக்கையுடன் அவர் துவங்கிய போராட்டத்திற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஆதரவு அளித்தனர்.

6 மணி நேரம் இந்த போராட்டம் தொடந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், பேச்சு வார்த்தை நடத்தி மதுக்கடையை தற்காலிகமாக இழுத்து மூடினர். மேலும் நிரந்தரமாக மூட நடவடிக்கைக்கு மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleலண்டனில் உள்ள பல கோடி மதிப்பிலான பணம் யாருக்கு சொந்தம்! வெளியான முக்கிய தகவல்!
Next articleஅம்மாாாா எங்கம்மா போன! எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே! கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்!