நடிகை வரலட்சுமியின் படப்பிடிப்பில் பயங்கர தீ விபத்து! ஐந்து வயது சிறுமி உள்பட இருவர் பலி!

0

மாரி-2 படத்திற்கு அடுத்ததாக வெல்வெட் நகரம், நீயா-2 போன்ற படங்களில் நடித்து வருகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். மேலும் கன்னட மொழியிலும் ரணம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வி.சமுத்ரா என்பவர் இயக்கிவரும் இப்படத்தில் சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார், வரலட்சுமி. இந்நிலையில் இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பெங்களூருக்கு அருகிலுள்ள பாகலூரில் படமாக்கப்பட்டது.

அக்காட்சியில் இரண்டு கார்கள் மோதி தீப்பிடிப்பது போன்று காட்சியமைக்கப்பட்டது. அந்த சமயத்தில் அருகில் வைத்திருந்த கேஸ் சிலிண்டரில் தீப்பற்றி வெடித்து சிதறியது.

அதனால் வேடிக்கை பார்க்க வந்த ஐந்து வயது சிறுமியும் அவரது அம்மாவும்(28) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்த காவல் துறையிடம் முன் அனுமதி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதாயாரின் காதலனால் 7 வயது சிறுவனுக்கு எற்பட்ட துயரம்! உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!
Next articleகொசு தொல்லையால் வில்லேஜ் விஞ்ஞானியான இளைஞர்! வியக்க வைக்கும் விசித்திர கண்டுப்பிடிப்பு! வைரலாகும் காணொளி!