நடிகை நதியாவின் மகள்கள் வைரலான புகைப்படம்!

0
165

சமூக வலைதளத்தில் நடிகை நதியா முதன்முறையாக தனது மகள்களின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகிய நதியா 1988-ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு அமெரிக்காவில் குடியேறினார். இவர்களுக்கு சனம், ஜனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். அதன் பின் 2004-ல் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.

தற்போது நதியா குடும்பத்தினருடன் ஜப்பான் சென்று வந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிட்டுள்ளார்.

மகள்களை வெளியுலக்குக்கு காட்டாமல் இருந்த நதியா, முதல் தடவையாக அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதால் அவை வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் நதியாவுக்கு இவ்வளவு பெரிய மகள்கள்? என்று கேட்டுள்ளனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: