Home thatstamil one india tamil oneindia tamil நடிகர் அர்ஜுன் எடுத்த அதிரடி முடிவு! நடிகையின் பாலியல் புகார்!

நடிகர் அர்ஜுன் எடுத்த அதிரடி முடிவு! நடிகையின் பாலியல் புகார்!

0
425

தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிஹரன் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மட்டுமே இது குறித்த விசாரணை கூட்டத்தில் பங்கேற்பேன் என நடிகர் அர்ஜுன் அதிரடியாக கூறியுள்ளார்.

நிபுணன் என்ற திரைப்படத்தில் நெருக்கமான காட்சிகளில் அர்ஜுன் தன்னிடம் வரம்பு மீறியதாக ஸ்ருதி ஹரிஹரன் புகார் தெரிவித்திருந்தார், இதை அர்ஜுன் மறுத்தார்.

இந்நிலையில் அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்த, ஸ்ருதி ஹரிஹரனிடம் விசாரணை நடத்த, கன்னட திரைப்பட வர்த்தக கவுன்சில் கூட்டம் பெங்களூரில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அர்ஜுனையும் அழைத்து சமாதானம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், ஸ்ருதி ஹரிஹரன் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கோரி கடிதம் தந்தால் மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதே போல் ஸ்ருதியும், அர்ஜுன் மீதான புகாரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப் போவதாக சவால் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇளமையை நீண்ட நாட்கள் தக்க வைக்கும் அற்புத இயற்கையான பானம் தயாரிக்கும் முறை.
Next articleகம்பளையில் நடந்த அசிங்கம்! காட்டுக்குள் மோசமாக நடந்து கொண்ட 4 மாணவர்கள்!