நடிகர் அஜித் மகளை கொஞ்சி விளையாடும் விஜய்! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத வைரல் காட்சி !

0
462

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் முன்னணி நடிகர்களாக இன்றும் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களின் முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.

25 ஆண்டுகளுக்கு மேல் இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக உருமாறியிருக்கிறார்கள். இவர்களுக்காக ரசிகர்கள் என்றும் அடித்து கொண்டே இருப்பார்கள்.

இவர்கள் தங்களுக்கு என்று இருக்கும் தனி நடிப்புத் திறமையால் முன்னுக்கு வந்தவர்கள். தங்களுக்கு என்று தனித் தனி சிறப்புகள் கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவரையும் ஒப்பிட்டாலும், இருவரும் தங்களது திறமைகளில் சளைக்காதவர்களாகத் தான் உள்ளனர்.

அஜித் அதிக ஸ்டைலிஷ் என்று சொன்னால் விஜய் பிட் ஆக அஜித்தை விட இளமையுடன் காணப்படுகிறார்.

அஜித் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பார் என்றால் விஜய் நடனத்தில் கில்லாடி. ரொமான்ஸ் காட்சிகளில் அஜித்தின் கண்கள் பேசும். இது கொஞ்சம் விஜய்யிடம் மிஸ்ஸிங். ஆனால், நகைச் சுவை காட்சிகளில் விஜய் கலக்குவார்.

அஜித்துடன் ஒப்பிடுகையில் அதிக ஹிட் படங்களை விஜய் கொடுத்துள்ளார். அதிக ரீமேக் படங்களையும் கொடுத்துள்ளார்.

வசனங்களை சரளமாக அடுக்கு மொழியில் சொல்லுவதில் விஜய் கில்லாடி. இது அஜித்திடம் மிஸ்ஸிங் அல்லது அவருக்கு அதுமாதிரியான வாய்ப்பு அமையவில்லை என்று வைத்துக் கொள்ளலாம்.

அஜித் கார் ரேசர். விஜய்க்கு இரவு நேரங்களில் தானே பைக், கார் ஓட்டிச் செல்வது பிடிக்கும். அஜித்துக்கு திரையுலகில் பின்புலம் இல்லை. ஆனால், விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்குநராக இருந்து வருகிறார்.

இப்படி இருவரின் ஒற்றுமைகளையும் அடுக்கி கொண்டே போகலாம். ஆனால், இவர்கள் இருவரும் திரை உலகை தாண்டி நல்ல நண்பர்கள்.

இதற்கு சிறந்த எடுத்து காட்டு இந்த காணொளி. இது பழைய காணொளி என்றாலும், அவர்களின் நட்புக்கு எடுத்து காட்டாக உள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: