நடிகர் அஜித்தின் முதல் காதலி யார் தெரியுமா?

0
414

கோலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் அஜித்-ஷாலினி தம்பதியினர் திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெண்களின் மீது அதிக மரியாதை வைத்திருக்கும் அஜித், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் செய்யும் வேலைகள் மீது நாம் காட்ட வேண்டிய அக்கறை குறித்து அவ்வப்போது பகிர்ந்துகொள்வார்.

இந்த அன்புதான் அஜித்தை ஷாலினி காதலிக்க அச்சாணியாக இருந்துள்ளது. அஜித்தின் முதல் காதலி பைக். இரண்டாவது காதலி ஷாலினி. இதனை அவரே பலமுறை கூறியிருக்கிறார்.

திருமணத்திற்கு முன்னர் அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர் அஜித், ஆனால் அந்த புகை தனக்கு பகையாக இருக்கிறது என ஷாலினி கூறியதையடுத்து அதனை கைவிட்டார் இன்றுவரை அதனை தொடவில்லை.

அமர்க்களம் திரைப்படத்தின் போது ஒன்றாக நடித்த இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.

அத்திரைப்படத்தின் ஒரு காட்சியில், ஷாலியின் கையில் அஜித் கத்தியால் கிழித்துள்ளார்.

தன்னால் இப்படி ஷாலினுக்கு நடந்துவிட்டதே என்று அஜித் பரபரப்பாக இருக்க, எவ்வித அலட்டலும் இல்லாமல், பரவாயில்லை என்று கூறி நிதானமாக இருந்துள்ளார் ஷாலினி.

ஷாலினியின் அந்த நிதானம் அஜித்திற்கு பிடித்துவிட, அப்போதே அவரது இதயத்திற்குள் ஷாலினி குடிகொள்ள ஆரம்பித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் போதே இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர். இதுவரை சந்தித்த பெண்களிடம் காண முடியாத தீர்க்கம் ஷாலினின் கண்ணுக்குள்ளும், செயலுக்குள்ளும் ஒளிந்திருப்பதை உணர்ந்த அஜித், எனக்கான தேடல் இவள்தான் என்பதை அறிந்து, நேராக ஷாலினியிடம் சென்று உன்னை கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதே ஆசை, ஷாலினியின் மனதுக்குள்ளும் இருந்ததால், காதலுக்கு பச்சைகொடி காட்டியதால் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

ஷாலினி கிறிஸ்துவர், அஜித் பிராமின், இது அவர்களது காதலுக்கும், வாழ்வியலுக்கும் ஓர் தடையாக இருந்திடவில்லை.

காரணம் யாரும், மற்றொருவருக்காக மதம் மாறவில்லை. மதம் என்பது உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் வளர்வதற்காக தானே தவிர, காதலுக்கு தடையாய் அமைவதற்கு அல்ல.

கணவன்- மனைவி ஆகிய இருவரும், ஒருவருக்கொருவர் மரியாதை அளித்து, தங்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்துகொண்டாலே இல்லறம் இனிக்கும் என்கிறார் அஜித்.

படப்பிடிப்பின்போது வெளியூர்களுக்கு சென்றால் தனது மனைவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு எப்போதும் i Love You என சொல்லிக்கொண்டே இருப்பார். தனது வாழ்க்கையின் தடைகளை உடைத்து தான் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பதற்கு ஷாலினிதான் பக்கம்பலமாக இருந்துள்ளார் என பெருமையாக கூறியுள்ளார் ’தல அஜித்’.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉசுரோட வா மகனே சுர்ஜித்திற்காக வைரமுத்து கவிதை!
Next articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 29.10.2019 செவ்வாய்க்கிழமை !