நடக்கப்போவது என்ன? வாட்ஸ் அப்பில் உலா வரும் தகவல் உண்மைதானா? நாடு முழுவதும் உஷார் நடவடிக்கை!
இந்தியா மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் விசயம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் மீதான வழக்கின் தீர்ப்பு. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சை குறித்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான குழு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
வரும் நவம்பர் 13 ல் இதன் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக பாதுகாப்புகளை பலப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாம்.
மேலும் வழக்கும் சம்மந்தப்பட்ட இடமான அயோத்தியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 8 தற்காலிக சிறைகளை அமைத்துள்ளார்களாம். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகளும், ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் உள்ளனவாம்.
இதை காண்கையில் வாட்ஸ் அப்பில் இவ்வழக்கு பாதுகாப்பு எச்சரிக்கை குறித்த தகவல் ஒன்று உண்மை தானோ என தோன்றுகிறது.