நக்கீரன் புலனாய்வு இதழின் ஆசிரியர் கோபால் அதிரடி கைது!

0
179

நக்கீரன் புலனாய்வு இதழின் ஆசிரியர் கோபால், சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை ஆக இருந்த நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இது குறித்து புலனாய்வு பத்திரிக்கை என்ற அடிப்படையில் நக்கீரன் இதழில் கட்டுரைகள் வெளியாகின.

இந்நிலையில், புனே செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் சென்ற நக்கீரன் ஆசிரியர் கோபால், தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக நக்கீரன் இதழில் வெளியான கட்டுரை தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து அளிக்கப்பட்ட புகாரில் ஜாம் பஜார் போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். என்னென்ன பிரிவுகளில் நக்கீரன் கோபால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: