நகைகளை சாப்பிட்ட மாடு… எப்போது சாணம் போடும் என ஆவலாக காத்திருக்கும் குடும்பம் !

0
479

நகைகளை சாப்பிட்ட மாடு எப்போது சாணம் போடும் என ஒரு குடும்பமே தினமும் உணவளித்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அரியானா மாநிலத்தை சேர்ந்த ஜனக் என்கிற தொழிலதிபரின் மனைவி மற்றும் மருமகள் கடந்த மூன்று தினங்களுக்கு முன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களை சமையலறையில் உள்ள ஒரு டப்பாவில் கழற்றி வைத்துவிட்டு மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் இதனை அறிந்திராத வீட்டில் இருந்த மூதாட்டி, எஞ்சிய காய்கறிகளை அந்த டப்பாவில் போட்டு வெளியில் இருந்த குப்பையில் வீசியுள்ளார்.

அப்போது அங்கு சுற்றித்திரிந்த காளை மாடு ஒன்று காய்கறிகளை சாப்பிட்டுவிட்டு சென்றுவிட்டது. இதற்கிடையில் நகைகள் காணாமல் போனதை அறிந்துகொண்ட ஜனக், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய ஆரம்பித்தனர்.

அப்போது காய்கறி கழிவுகளுடன் சேர்த்து காளை மாடு நகைகளையும் சாப்பிட்டிருப்பது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் 5 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஒருவழியாக மாட்டை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில் மாட்டை வீட்டின் அருகாமையிலே கட்டிவைத்து மூன்று நாட்களாக உணவு மற்றும் நீர் கொடுத்து சாணத்திற்காக காத்திருக்கின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசவாரி செய்ய வரும் நபர்களை கண்டால் மயக்கம் வருவதுபோல் நடிக்கும் குதிரை.. வைரல் காட்சி!
Next articleஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து முடக்கு வாதம், சோரியாஸிஸ், கரப்பான், மற்றும் பா.ல்.வினை நோய்களுக்கு மருந்தாகும் வேர் !