உங்களுடைய நகங்கள் இப்படி இருந்தால் நீங்கள் இந்த விடயங்களில் இப்படி நடந்து கொள்வீர்களாம்!

0

ஒருவரின் குணநலன்களை அவரின் விரல்களில் உள்ள நகங்களின் வடிவத்தை வைத்து கணிக்க முடியும்.

நீளமான நகம் உடையவர்கள்

நகங்கள் நீளமான வளர்ந்திருந்தால், அவர்களின் வலதுபக்க மூளை நன்றாக வளர்ந்திருக்க முடியும் என்ற வகையில், அவர்களுக்கு அதிகளவான கற்பனைத் திறன் அமையப் பெற்றிருக்கும். அவர்கள் ஒரு பெரும் படைப்பாளியாக திகழுவதுடன், இவர்களின் சிலவகையான சூழ்நிலைகள் காரணமாக எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடக் கூடியவர்களாகவும் இருப்பர்.

அகன்ற நகங்கள் உடையவர்கள்

நகங்கள் அகலமாக அமையப் பெற்றிந்தால், அது அவர்களின் இடது பக்க மூளை நன்றாக வளர்ந்திருக்கும் என்பதனை வெளிப்படுத்தும். இதனால் இவர்கள் பேச்சாற்றல் மிக்கவர்களாகவும், மனத்தில் நினைப்பதைத் தெளிவாகப் பேசுவதன் மூலம், தமது பேச்சினால் மற்றவர்களை எளிதில் மயக்கிவிடுவார்கள். எனினும் மறுபக்கத்தில் இவர்கள் மிகவும் கோபம் மற்றும் பொறுமை இல்லாதவர்களாகவே இருப்பார்கள்.

முட்டை வடிவ நகங்கள் உடையவர்கள்

முட்டை வடிவத்தில் அமையப் பெற்றிருந்தால், அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுடன், சமுதாயத்தில் அதிகளவான பொறுப்புணர்ச்சியை கொண்ட இவர்கள் அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஏதேனும் ஒரு சிறய பிரச்சினை என்றாலும்; அது தனக்கே ஏற்பட்டது போல அதனை உடனே தீர்த்து வைப்பதற்கு முயற்சிப்பார்கள்.

சதுர நகங்கள் உடையவர்கள்

நகங்கள் சதுர வடிவில் அமையப் பெற்றிருந்தால், அவர்கள் தைரியம் மற்றும் விடா முயற்சியை தமது இரண்டு கண்களாக நினைபபவர்களாக இருப்பதனால், அவர்கள் எப்போதும் தீவிரத்திடனே காணப்படுவர். எனினும், இவர்களுக்கு தலைக்கனம் அதிகமாக இருப்பதன் காரணமாக, இவர்களின் முதல் எதிரியாக அத்தலைக்கனமே காணப்படும்.

முக்கோண நகங்கள் உடையவர்கள்

நகங்கள் முக்கோண வடிவில் அமையப் பெற்றிருந்தால், அவர்களிடம் நிறைய ஐடியாக்கள் பொங்கி வழியும். அதாவது ஐடியா மணி என பிறரால் அழைக்கப்படும் வகையில் ஆலோசனை சொல்வதில் வல்லவராக இருப்பார்கள். இதனால், மற்றவர்கள் தவறவிடும் சிறிய விடயங்களைக் கூட இவர்கள் சரியாகப் கண்டுபிடித்து விடுவார்கள்.

மேலும், நகங்கள் தலைகீழ் முக்கோண வடிவில் அமையப் பெற்றிருந்தால், அவர்கள் எதிலும் ஊக்கமுடையவர்களாக இருப்பதுடன், மேற்கூம்பிய முக்கோண வடிவில் அமையப் பெற்றிருந்தால், அவர்களை சுற்றி இடம்பெறும் சிறிய கொடுமையான விடயங்களை கூட இவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

கூர்மையான நகங்கள்

நகங்கள் கூர்மையாக அமையப் பெற்றிருந்தால், அவர்கள் கடுமையான உழைப்பாளியாக இருப்பதுடன், அவர்கள் தமது வாழ்க்கையின் குறிக்கோளை நிறைவேற்றத் தேவையான உழைப்பைக் வழங்க தயங்க மாட்டார்கள். அதேவேளை, ஏதாவது ஒரு விடயம் அவர்களுக்கு பிடிக்காவில்லை என்றாலும்;; அவை தங்களின் வளர்ச்சிக்குத் தேவையாக இருந்தால், அவற்றைக் கட்டாயம் செய்து முடிக்கும் பிடிவாத குணத்தை உடையவர்களாக காணப்படுவர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமனைவியின் பிரிவைத் தாங்கமுடியாத கணவன் ஒருவர் தற்கொலை.
Next article11 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்.