தோழியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த நபர்: விசாரணையில் வெளியான தகவல்!

0
292

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் மது போதையில் தோழியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த நபரை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண்மணியே குறித்த விவகாரம் தொடர்பாக பொலிசாரிடம் புகார் தெரிவித்தவர்.

துபாயில் ஆசிரியராக பணிபுரியும் குறித்த பெண்மணி சம்பவத்தன்று தனது பாகிஸ்தான் நாட்டு நண்பருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

29 வயதான அந்த பாகிஸ்தான் நாட்டவர் துபாயில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் குறித்த பெண்மணியை அவரது குடியிருப்புக்கு அழைத்துச் செல்வதாக கூறி தனது காரில் ஏற்றிச் சென்றுள்ளார் அந்த நபர்

இதனிடையே மது போதை காரணமாக அருகாமையில் உள்ள பாலைவனத்துற்கு வலுக்கட்டாயமாக குறித்த பெண்மணியை அழைத்துச் சென்று, அங்கே அவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தனது வாகனத்திலேயே குறித்த பெண்மணியை பலாத்காரம் செய்த அந்த நபர் பின்னர் மீண்டும் வாகனத்தை எடுத்துக் கொண்டு நெடுஞ்சாலை வழியாக சென்றுள்ளார்.

இதனிடையே குறித்த பெண்மணியின் மிரட்டலுக்கு பயந்து அவர் தனது காரை நிறுத்தியுள்ளார். அங்கிருந்து தப்பிய அவர், வாடகை டாக்ஸி ஒன்றை பிடித்து நேராக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார், குறித்த பாகிஸ்தான் நாட்டவரை கைது செய்துள்ளனர்.

ஆனால் தமது குற்றத்தை மறுத்துள்ள அவர், அனைத்தும் கட்டுக்கதை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வாடகை டாக்ஸி ஓட்டுநரை அழைத்து விசாரித்ததில், சம்பவத்தின் போது குறித்த பெண்மணியின் உடை கிழிக்கப்பட்டு இருந்ததாகவும், முகத்தில் தாக்கப்பட்டதன் காயம் இருந்ததாகவும் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்போது குற்றஞ்சாட்டப்பட்ட பாகிஸ்தான் நாட்டவரை டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்திய பொலிசார், பாலியல் பலாத்கார வழக்கை உறுதி செய்துள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: