தோனிக்காக புதிய பாடல் எழுதும் பிராவோ, செம குஷியில் ரசிகர்கள்.
உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதனால் சினிமா நடிகர்களைப் போலவே கிரிக்கெட் வீரர்களும் தற்போது ஊரடங்கு நேரத்தில் சமூகவலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான பிராவோ(Bravo ) எம் எஸ் தோனிக்காக சிறப்பு பாடல் ஒன்றை உருவாக்கி வருவதாக பாலிவுட் ரசிகர்களிடம் உரையாடியபோது கூறியுள்ளார். இந்த பாடலுடைய தலைப்பு எண் ’7’ என்றும் தோனியினுடைய வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சாதனைகள் அனைத்தும் இந்த பாடலில் இருக்கும் என கூறியுள்ளார்.
விரைவில் பிராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார் என கூறியிருக்கிறார். இதைக் கேட்ட தோனியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பாடலை எதிர்பார்த்துள்ளனர்.
By: Tamilpiththan